Posts

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது . மன நிம்மதி நிறைகிறது . உறவுகள் ஒன்று கூடுகிறது . ஏழைகள் பசியாறுகிறார்கள் . பள்ளி ,  மத்ரஸாக்கள் பயனடைகிறது . இறையருல் இறங்குகிறது . தியாக உணர்வு உயர்கிறது . ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது . கூட்டுறவு மேம்படுகிறது . வறியவர்கள் வளம் பெறுகிறார்கள் . அனாதைகள் பலம் பெறுகிறார்கள் . முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே   அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்  கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்   பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளையினர்களும்,தி யாகத்  திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து  துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottaisunnathjamath.blogspot.com

தமிழ் கூறும் நல்லுலகின் ஆலிம்கள் மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு

Image
அரபுக் கல்லூரிகளின் அனுபவமிக்க விற்பனர்கள் பயிற்றுவிப்பால் நடத்தப்படும், தப்ஸீர்,ஹதீஸ் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற இஸ்லாமிய ஒருநாள் பயிற்சி வகுப்புகள். ஒவ்வொரு கலையும் ஒரே நாள் வகுப்பில்..... நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) கலை பயிலரங்கம் நாள் ; 3-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள் மௌலானா அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (தலைமை இமாம்,கரும்புக்கடை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்,கோவை) அகீதா (கொள்கை விளக்கம்) பயிலரங்கம் நாள் ; 10-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள். மௌலானா அ.சையது முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (முதல்வர், ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி,திருவனந்தபுரம்,கேரளா) இஸ்லாமிய சொத்துரிமை (மீராஸ்) பயிலரங்கம் நாள் ; 17-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள். மௌலானா ஏ.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் (முதல்வர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்) மௌலானா கே.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் (பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்) வான சாஸ்திர பயிலரங்கம்

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்

Image
இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்ல

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு