Posts

நபிகள் நாயகம் (ஸல்) பயோடேட்டா

Image
நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்  (BIO _DATA)) -   தொகுப்பு  மௌலானா  மௌலவி   அ .   அப்துல்   அஜீஸ்   பாக்கவி பெயர் : முஹம்மது ( பாட்டனார் சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவர் என்று பொருள் ) பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திங்கள் கிழமை பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா தகுதி: 1 - 40 வயதில் நபி ( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தேர்வு செய்யப்பட்ட மனிதர்) 2 - ரஸுல் - இறைத்தூதர் ( புதிய சட்ட அமைப்பு வழங்கப்பட்டவர்) 3 - இறுதித் தூதர் கல்வி :எழுதப்படிக்க கற்காதவர் தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் (முஹம்மது நபி (ஸல்) ஆமினா அம்மாவின் கர்பத்தில் ஆறு மாத சிசுவாக இருக்கும் போது அப்துல்லாஹ் மரணமடைந்தார். ) தாயார் : ஆமினா பின்து வஹப் (முஹம்மது நபியின் ஆறாவது வயதில் தாயார் ஆமினா இறையடி சோந்தார்) பாட்டனார் (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸை பெரிய தந்தை : அபூதாலிப் முதல் திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண் கதீஜா ( ரலி)  அவர்களை திருமணம் செய்தார்கள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் க

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்ற மகத்தான வெற்றி!

Image
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை.இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.)HISTORICALLY IT IS GUITE DOOB FULL WHETHER CHRIST EVER EXISTED AT ALL.(B.RUSSELL) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.  நபி (ஸல்) அவர்களின்

' மூச்சடங்கிய கம்பீரம்'

Image
மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா மறைவு. SSK என்ற மூன்று எழுத்துகளில் பிரபலமாக அறியப்பட்ட முதுபெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், ஸஃபர் பிறை 5 (20.12.2012) வியாழன் அன்று மறைந்தார். ஓரிரு வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும்,இயலாமைக்கு ஆளாகிய இறுதி நிமிடம் வரை இஸ்லாமிய மார்க்க மேடைகளில் சங்கநாதம் செய்து கொண்டிருந்த, கம்பீரக் குரலுக்கும்,தோற்றத்திற்கும்,வாழ்விற்கும் சொந்தக்காரரான அவர்,பன்முக ஆற்றல் கொண்டவர். தஞ்சை மாவட்டம்,கிளியனூரில் பழமையான ' ரஹ்மானிய்யா ' அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய சமயக் கல்வியில் மௌலவி -- ரஹ்மானி' பட்டம் பெற்ற அவர்,கடையநல்லூர் அருகிலுள்ள 'பாம்புக் கோவில் சந்தை' என்ற கிராமத்தில் இமாமாக தன்னுடைய மார்க்க சேவையைத் தொடங்கினார். பின்னர் இரண்டு வருடம் நெல்லை பேட்டையில் உள்ள 'ரியாழுல் ஜினான்' அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு,1970 இல் காயல் பட்டினத்திலுள்ள புகழ் பெற்ற 'மஹ்ழரா'  அரபுக் கல்லூரியில்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு