Posts

அவசரம் ஆபத்தானது !!

Image
அவசரம் என்பது ஒரு பொருளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பு தேடுவதும் அதைப்பெற முயற்சிப்பதுமாகும். விளங்காமல் பேசுவது புரியாமல் பதிலளிப்பது அனுபவப்படுவதற்கு முன்பு ஒரு ஆளைப் புகழ்வது புகழ்ந்தபின் பழிப்பது. இதுவெல்லாம் அவசரத்தால் விளையும்   அபத்தங்களாகும். " நிதானம் அல்லாஹ்வினால் வருவது. அவசரம் ஷைத்தானால் விளைவது "  (நபி மொழி- முஸ்னது அபீயஃலா. 4256) ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அதனால் தான்   " நீதிபதி கோபத்தில் இருக்கும்   போது தீர்ப்ப‍ளிக்க வேண்டாம் "   எனக்கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) (புகாரி ;  7158 - முஸ்லிம் ;  1717) பதறாத காரியம் சிதறாது. எனவே பதறினால் எந்தக் காரியமும் சிதறிவிடும் '' கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் '' எனவே எதைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசவோ வெடுக் வெடுக் என அவசரப்பட்டு   எந்த முடிவும் எடுப்பதோ கூடாது. ''  நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உன்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரனை செய்து

கீழக்கரை முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் காலமானார்!

Image
கீழக்கரை குத்பா கமிட்டி முன்னால் தலைவரும்,கீழக்கரை பேரூராட்சி மன்றத்தின் முன்னால் தலைவரும்,இராமநாதபுர மாவட்ட ஷரீஅத் கோர்ட்டின் தலைவர்,கீழக்கரை முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,வயது 92 (3-02-2013) ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் (4-02-2013) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை அமீருன்னிஸா பேகம் கபரஸ்தானில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் இன்று வாழும் மார்க்க மேதைகளில் மிகச் சிறந்த அறிஞரும்,ஷரீஅத் கவுன்சில் உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவரும், மஙானீ  (மார்க்க சட்டக் கருவூலம்) போன்ற மிகப்பெரிய கிரதங்களை வெளியிட்டு,மார்க்க சேவைக்கு பெரிதும் பாடுபட்ட மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மறைவு தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்க்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சென்னையில் சுலைமான் ஆலிம் டிரஸ்ட் நிறுவி பல்வேறு உதவிகளை செய்து வந்த பெருமைக்குரியவர்,கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்,ஸதக்கத்துல்லாஹ் அப்பா

ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம்!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர் பிறை 1- (1-02-2014) சனிக்கிழமை மாலை முதல் தொடங்கி,பிறை 11- 4-1434  (11-02-2014) செவ்வாய்க்கிழமை வரை 11 நாட்கள்,மலேசியத் தலைநகர் நமது மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெறும், அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும்  ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப்  நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்... வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு