Posts

வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில்  ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்   சிறப்பாக ஓதப்பட்டு, (23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர்  மஸ்ஜிதுர் ரய்யான்  ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு ,  சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வாழும்ஊரில் (வாழூரில்) பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும் ,  மலேசியா , இலங்கை ,  மற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில்  பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,  ஹஜ்ரத் முஹ்

சித்தார் கோட்டையில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப்,  சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி,மற்றும் சின்னப்பள்ளி வாசலில்   ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்   சிறப்பாக ஓதப்பட்டு, (23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில்  சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி  வாசலில்,   சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி  தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு ,  சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியில் கந்தூரி விசேச உணவு ,ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. சித்தார்கோட்டையில் பகுதாதில் வாழும் தவஞானி  வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,  ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும் ,  மலேசியா , இலங்கை ,  மற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில்  பகுதாதில் வாழும் தவஞானி, வலிகள் கோ

அவசரம் ஆபத்தானது !!

Image
அவசரம் என்பது ஒரு பொருளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பு தேடுவதும் அதைப்பெற முயற்சிப்பதுமாகும். விளங்காமல் பேசுவது புரியாமல் பதிலளிப்பது அனுபவப்படுவதற்கு முன்பு ஒரு ஆளைப் புகழ்வது புகழ்ந்தபின் பழிப்பது. இதுவெல்லாம் அவசரத்தால் விளையும்   அபத்தங்களாகும். " நிதானம் அல்லாஹ்வினால் வருவது. அவசரம் ஷைத்தானால் விளைவது "  (நபி மொழி- முஸ்னது அபீயஃலா. 4256) ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அதனால் தான்   " நீதிபதி கோபத்தில் இருக்கும்   போது தீர்ப்ப‍ளிக்க வேண்டாம் "   எனக்கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) (புகாரி ;  7158 - முஸ்லிம் ;  1717) பதறாத காரியம் சிதறாது. எனவே பதறினால் எந்தக் காரியமும் சிதறிவிடும் '' கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் '' எனவே எதைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசவோ வெடுக் வெடுக் என அவசரப்பட்டு   எந்த முடிவும் எடுப்பதோ கூடாது. ''  நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உன்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரனை செய்து

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு