Posts

அறுத்தெரிந்திடு தோழா......... அகந்தையை !!!!

Image
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஜகாத்,ஸதக்கா,கொடுப்பதற்குத் தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் கடமையாக்கியுள்ள இன்னொரு அமல் குர்பான். குர்பான்,குர்ஆன் இந்த இரண்டுக்கும்  ஒரு எழுத்து வித்யாசப்படும்.குர்பான் என்றாலும்,குர்ஆன் என்றாலும்,நெருங்குதல்,  அடுத்துச்செல்லல் என்பதே பொருளாகும். இறைமறை தன்னை இதயத்தில் சுமந்து,இறை அன்புக் கட்டளைகளை,நமக்கருளிய,இறைத்தூதர்  பெருமானார் ( ஸல் ) அவர்களின் உன்னதமான அமல்களில் குர்பானியும் ஒன்றுதான்.குர்பானி கொடுக்கும் மனிதன், குர்பானி பிராணியை அறுக்கும் போதே தனது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அகந்தையை,தற்பெருமையை, ஆனவத்தை அறுத்து எறிவதோடு,நான்,நான்தான்,என்ற அகம்பாவத்தை அறுத்தெரிய வேண்டும். அப்படி அறுத்தெரிந்தால்தான் குர்பான் என்ற சொல்லின்,நெருங்குதல் என்ற பொருள் உணர்ந்து,இறை நெருக்கம் பெற ஏதுவாகும். யா அல்லாஹ் உன்னை நெருங்கும் உன்னத அமலையும் எங்களுக்கு கொடுத்து,உன் திருப்பொருத்தம் பெற்றிடும்  குர்பானியையும் தந்து அருள்புரிவாயாக மேலும்,. அனைவர்களுக்கும் எனது தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஆமீன்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!

Image
                          ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது. எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல

அறியவேண்டிய அரஃபா நாள் !!!

Image
عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال :  «أفضلُ الأيام يومُ عرفة நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும்.  (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் ) இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும். سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ  « صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة » அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425) அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765) அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766) இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்லாஹ்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு