Posts

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

Image
பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!! மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த  மாதம்  ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்   அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும். எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ,விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது. மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம்,கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வு

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 12 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1488 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வருகிற 02--01--2014  வியாழன் தொடங்கி 13--01--2014  திங்கள் வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின்  சரியாக ஒரு மணி நேரம்  பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் . மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது அபூபக்கர் உலவி ஹஜ்ரத். இமாம்,பெரிய பள்ளிவாசல்,நீடூர்,மயிலாடுதுறை. ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்ப்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்,அஹ்மது ஃ

பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!

Image
   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவரும், பள்ளப்பட்டி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாமும்.பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்  (13.12.2013) வெள்ளிக்கிழமை அதிகாலை பள்ளப்பட்டியில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை  9 மணிக்கு  பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில்  நடைபெறுகிறது . மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவராகவும், திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் பள்ளப்பட்டி. பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியில் பத்து ஆண்டுகாலம் முதல்வராக பணிபுரிந்து வந்தவர்கள். ஹஜ்ரத் அவர்களுக்கு  3 பெண்மக்களும்,1 ஆண்மகனும் உள்ளனர்.  எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு