Posts

சித்தார் கோட்டையில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (16-05-2015) சனிக்கிழமை பின்னேரம், ஞாயிறு இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்,சித்தார் கோட்டை  ஜன்னத்துல் பிர்தௌஸில், சித்தார் கோட்டை  ஜன்னத்துல் பிர்தௌஸ்,தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அப்துல் காதிர் மஹ்ழரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள், மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் லட்சக்கணக்கான பாக்கியவான்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்..

சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவு புதிய சத்துணவுக்கூடத் திறப்புவிழா

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவாக, அன்னாரின் பிள்ளைகளால் கட்டப்பட்ட, முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் புதிய  சத்துணவுக்கூடத் திறப்புவிழா  10-05-2015 அன்று  டாக்டர் ஃபாத்திமா சின்னத்துரை அவர்களால், திறக்கப் பட்டு,முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவிற்கு வக்ஃபு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !!!!

மலேசியாவில் நடைபெற்ற 58 ஆம் ஆண்டு தேசிய அளவிலான திருக்குர்ஆன் ஓதும் போட்டி !!!

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியாவில் 58 ஆம் ஆண்டு,தேசிய அளவிலான  திருக்குர்ஆன் ஓதும் போட்டி, சென்ற ஏப்ரல்  20-04-2015 முதல் 25-04-2015 வரை மிகச் சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ். இதில் ஆண்கள் பிரிவில் கிளந்தான் மாநிலத்தைச்சேர்ந்த,  உஸ்தாத் அய்னுதீன் பின்  அப்துலாஹ் முதல் நிலை வெற்றியாளராகவும்,பெண்கள் பிரிவில் பாஹாங்  மாநிலத்தைச்  சேர்ந்த,  சித்தி ஹுஸ்னா ஹாஸன்  அவர்களும் வெற்றியாளர்களாக தேர்வு பெற்றனர்.முதல்  பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள கார்,30 ஆயிரம் ரொக்கம், புனித ஹஜ் பேக்கேஜ்,சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் தேர்வு பெற்றவர்கள்,  இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி  முதல் 14 ஆம் தேதிவரை  தலைநகர் புத்ரா வாணிப  மையத்தில் நடைபெறும் உலகலாவிய திருக்குர்ஆன் போட்டியில், மலேசியாவை பிரதிநித்து கலந்து கொள்வார்கள்.வஸ்ஸலாம்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு