Posts

மௌலானா மௌலவி மர்ஹும் A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின்,அக்கா A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  மௌலானா மௌலவி மர்ஹும்  A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில்  மன்பயீ  ஹஜ்ரத் அவர்களின்,அக்காவும்,ஜனாப்,  அ.முஹம்மது அலி அவர்களின் மனைவியுமான, A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள்,03-08-2015 அன்று  மலேசியாவில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல்  பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ்  மர்ஹூம் ஆயிஷா சித்தீக்கா அவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,  குற்றங்களை  மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும்  சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின்   பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா'  எனும் அழகிய பொறுமையை தந்தருள,  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்   துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.  வஸ்ஸலாம்... வெளியீடு ;- குடும்பத்தார்கள்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா வாழ்த்துரையின் தொகுப்பு.

Image
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152 ஆம்  ஆண்டு விழா 71 வது பட்டமளிப்பு விழா நேற்று 31.05.2015  காலை 9.30  மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில்  மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. பட்டமளிப்பு  விழாவின் வாழ்த்துரையின் தொகுப்பு.. மவுலவி சிராஜித்தீன் ஹழ்ரத் . ஆயங்குடி மவுலவி ஜாஃபா்அலி மன்பஈ ,  பரங்கிப்பேட்டை மவுலவி கவுஸ்மைதீன் மன்பஈ , ஆகியோரின் வாழ்த்துரை.. இஸ்லாமிய கீதம்.. சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத் வாழ்த்துரை.. ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது”  பட்டம் வழங்கி வாழ்த்துரை.. வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள்  முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத் வாழ்த்துரை..

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸ் !!!

Image
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின்  152 – ஆம் ஆண்டு விழா மற்றும் 71 – ஆம் ஆண்டு பட்டமளிப்பு  விழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸில்  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.காஜாமுயீனுத்தீன்  பாக்கவி ஹழ்ரத் அவா்கள்.சிறப்புரையாற்றினார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு