Posts

இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் அரசாட்சி புரியும் மஹான் சீனி அப்பா ஷஹீது வலியுல்லாஹ் !!!

Image
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிக்கு அருகிலுள்ள,  சுந்தரமுடையான் என்ற அழகிய  கிராமத்திலுள்ள, அந்தக் கடற்கரையில் அலைகள் இல்லை. அமைதி கொஞ்சும் ஏரி போல் நீலக்கடல் விரிந்து கிடக்கிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மரங்கள் நிழல் விரித்திருக்கின்றன. மன அமைதியை நாடி மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கலாம். இங்குதான் அமைந்திருக்கிறது சீனி அப்பா தர்கா. ராமநாதபுரம் மாவட்ட இறைநேசர்களின் உறைவிடங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. இது. மண்டபத்திற்கு மேற்கே சுமார் பத்து மைல் தூரத்தில் தர்கா அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மண் சாலையைக் கடந்து வரவேண்டும். வந்து சேர்வதற்கு சிலருக்குக் களைப்பாகவும் தோன்றலாம். ஆனால்,தர்காவுக்கு வந்த பிறகு நிழலும் கடல் காற்றும் தரும் சுகத்தில் அலுப்பும் களைப்பும் அகன்றுவிடும். இந்த இடத்திற்குப் பெயர் மரைக்காயர்பட்டினம். பிரபலமான பாம்பன் கடல் பாலமும் அருகிலுள்ள மண்டபம் பகுதியில்தான் அமைந்துள்ளது. ஹழரத் யாசீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு என்று சிறப்பிக்கப்படும் சீனி அப்பா, ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள் !!!

Image
யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள். அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள். ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள். மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா,

இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!

Image
கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி)  - சிஸ்தான் - கிழக்கு ஈரான் ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக் ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான் ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான் இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான் இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான் இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான் இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக் இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக் இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான் மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு