Posts

ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!! அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இனிய தமிழுக்கும் அரபிமொழிக்கும் இடையிலுள்ள இணைப்புப்பாலம் "ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி  தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்கள். . தமிழ்நாட்டின் தென்முனையாகிய குமரி மாவட்டத்தின் தென்மேற்குக் கரையிலுள்ள தேங்காய்ப்பட்டினம் என்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த கடலோரக் கிராமத்தில் பிறந்த "ஆலிம் கவிஞர் " தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்களை பற்றிய பல்வேறு தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் . தமிழ் முஸ்லிம் சமுதாய மக்களிடையே - சிறந்த ஆன்மீக - சமுதாய மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர் , எழுத்தாளர் என்ற வகையில் - நன்கு அறிமுகமானவர். தமிழ்ச் செம்மல் இறையருள் கவிமணி டாக்டர் கா.அப்துல் கபூர் அவர்களை ஆசானாக ஏற்று தமிழ்க் கவிதை பயின்ற இவர்,அன்னாரின் தலைமையில் 7 கவியரங்குகளில் கவிதை வாசித்தவர்.இவரின் முதல் கவியரங்கிலேயே இறையருள் கவிமணியால் - " தேன் போன்ற கவியெழுதும் கையுடையார் " - " தேங்காய்ப்பட்டினத்தார் " என்ற இரட்ட

பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி !!!

Image
பெருநாளன்று மலாய் பெருமக்கள் குபூர் ஜியாரத்  செய்வார்கள் இந்த நல்ல பழக்கத்தை சிலர் ஆட்சேபம்  செய்து குறை கூறுகிறார்கள் இது சரியா ? பதில்: மலாய் சகோதரர்களின் சிறந்த இந்த சுன்னத்தான  காரியத்தை மறுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த முகாந்திரமும்  இல்லை சியாரத் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட  ஒரு சுன்னத்_நபிவழியாகும். தொழக்கூடாத நேரம் உண்டு நோன்பு வைக்ககூடாத  நாட்கள் உண்டு இதுமாதிரி சியாரத் செய்யக்கூடாத  நேரமோ  நாட்களோ ஷரியத்தில் இல்லாத போது  பெருநாளன்று  ஜியாரத் செய்யக்கூடாது  என தடை  செய்வதற்கு யாருக்கும் எந்த  அதிகாரமும் இல்லை. சியாரத் செய்யுங்கள் என்பது  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம்  அவர்களின் உத்தரவு.இந்த உத்தரவுக்கு  எதிரான எந்த  கருத்தையும் யார் சொன்னாலும் அதை தூக்கி எறிந்து  விடவேண்டும்.இன்னும் சொல்லப்போனால் பெருநாள்  அன்று சியாரத் செய்வது சிறந்தது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் பெருநாள் என்றால் கொண்டாட்டம் எனக்கருதி  ஆட்டம்  பாட்டத்தில் நமது மக்கள் ஈடுபட்டு மார்க்க விரோத  காரியத்தில் விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காக பெருநாள்  சந்தோஷத்தை நல்ல படிப

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்  நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும்  அன்பையும், அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும்  சுன்னத் வல்  ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும், தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி, அகமகிழ்ந்து துஆச்  செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath  blogspot.com .

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு