Posts

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்

Image
    பிஸ்மிஹி தஆலா உண்ணாமல் பருகாமல் உடலிச்சை கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல் ,  இடறாமல் ,   ஏற்றவழி       விலகாமல் இயல்பினிலே நன்மைகளை, இலங்க வைத்த ரமளானே நன்னாள்கள் உன்னாள்கள், நானிலத்தின்  பெருநாள்கள் நம்பிக்கை  கூட்டுகின்ற  நன்மார்க்கத்  திருநாள்கள் என்னாளும் உன் பயிற்ச்சி எமை நடத்திச் செல்வதற்கே இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை பண்பற்ற செயலில்லை;பாவமில்லை; பேதமில்லை மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள் மெய்புலனில் மனநலனில் மான்புடனே மாற்றங்கள் உய்வுற்று வாழுவதற்கே ஓரிறையின் ஓர் பரிசாய் உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே வையத்துல் வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர் வரத்தை வானத்தின் மீதிருந்து வழங்கி விட்டாய் நன்றிகளே இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப்பூ மணக்கும் இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம் இறைவனுக்கே தலை தாழும் என்கின்ற உள்ளுறுதி யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்

இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Eid ul-Fitr-ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்)

ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-01 ஈகை திருநாள். (நோன்பு பெருநாள்).-பாகம்-02

புனிதமிக்க கத்ர் இரவு-LAYLAT UL-QADR

புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-01 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-02 புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-03

ஜகாத்-Zakah

ஜகாத்.பாகம்-01 ஜகாத்.பாகம்-02

புனிதம் நிறைந்த ரமலான் மாதம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

           அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் . 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும் . 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் ,

பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது

    பனைக்குளம் ஆக -13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது , அரபு மாதங்களில் 10- வது மாதமான ரமலான் மாதத்தின்   முதல் பிறை நேற்று முன்தினம் இரவு   6-50 மணிக்கு தெறிந்தது . இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார் ,  கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A.  ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள் . இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட 8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது . இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம் ,  திருப்பாலைக்குடி , சித்தார்கோட்டை , வாழூர் ,  அத்தியூத்து ,  புதுவலசை ,  ஆற்றங்கரை ,  பெருங்குளம் ,   வழுதூர் , உச்சிப்புளி , புதுமடம் , வேதாளை , உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து , குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு , அதிகாலை 4-30 மணிக்கு சஹர் ( நோன்பு உணவு ) செய்து முதல்
Image
இனிய ரமலானே வருக! நோன்பின் சட்டங்கள். கேள்வி? பதில்! இஸ்லாமிய கேள்வி? பதில்!.கஹடோவிட – இலங்கை   இனிய ரமலானே வருக!பாகம் – 1 இனிய ரமலானே வருக!பாகம் – 2 இனிய ரமலானே வருக!பாகம் – 3 இனிய ரமலானே வருக!பாகம் – 4

சிறப்பு பயான் மஜ்லிஸ் அழைப்பிதழ்

Image
    பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்      அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவரும், சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்கல்லூரி முதல்வர் , மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா , அபுத்தலாயில், அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. ஹள்ரத் அவர்களின் பயான் நிகழ்ச்சி, மலேசியத் திருநாட்டின் தலைநகர் , கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே ! உஸ்தாது அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள் . அவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு  இன்ஷா அல்லாஹ் ( இரவு 7-30) மணியளவில் புனித ரமளானை வரவேற்று   இஸ்லாமிய்யச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள் . எனவே இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும், இச்சிறப்பான மஜ்லிஸில் கலந்து, அல்லாஹ்வின் அன்பையும் , அருளையும், பெற்றுக் கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம்,           03-08-2010          அல்மதரஸா மன்பவுன் நூர் , பண்டார் புக்கிட் பூச்சோங் .     (செவ்வாய்)       

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு