Posts

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் ص

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)

Image
நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.  (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.                                         بسم الله الرحمن الرحيم سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُ

ஒடுக்கத்துப் புதன் ஓர் ஆய்வு !!!

Image
கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். 'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர். பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233 குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது. நன்றி: வஸீலா 1-11-87 ஒடுக்கத்துப் புதன்  بسم الله الرحمن

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?

Image
யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..  உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு ச

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர் !!!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  setiawangsa masjid muadz bin jabal  ( செடிய வங்ஸா மஸ்ஜிது முஆது இப்னு ஜபல்)   பள்ளிவாசலில் மாபெரும் புனித மௌலிது ஷரீஃப்  மஜ்லிஸ் ( 28-11- 2014) வெள்ளிக்கிழமை  மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  மரியாதைக்குரிய  al habib ali zaenal abidin     ஷைகு அல் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன்  அவர்களும், மரியாதைக்குரிய  al habib umar bin muhammed salim  ஷைகு அல் ஹபீப் உமர் பின் முஹம்மது சலீம்  மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த் அதிகமான  ஷைகு மார்களும்,அரபியில் உரை நிகழ்த்தினார்கள். இச்சிறப்புப் பேருரைகளை மலாய் முஸ்லிமைச்  சார்ந்த உஸ்தாது மார்கள்,மிக அழகாக  மலாய்  மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை majlis ta' lim darul murtadza மற்றும்  setiawangsa masjid muadz bin jabal  பள்ளிவாசல் நிர்வாகமும் மிகச்சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்கள். இந்த சிறப்ப

إحياء علوم الدين

Image
  மலேசியத் தலைநகர் selayang  இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில்,  ( 22-11-2014 )  அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்  தலைமை இமாம்,,மௌலானா மௌலவி, அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.   

பெண் வாரிசு !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  21-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை       குத்பா பேருரை        மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள். தலைப்பு ;-  பெண் வாரிசு !!!

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு