ரபீஉல் ஆகிர் 7-முதல் ரபீஉல் ஆகிர் 28 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

விழுப்புரம் மஸ்ஜிதே இஃக்லாஸ் வளாகத்தில், நிஸ்வான் மதரஸாவுக்கு வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமக்களும்,முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் கிளை சார்பாக மீலாது விழா, மந்தக்கரை திடலில் நடைபெற்றது.இதில் வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களும்,மற்றும் முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

சென்னை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் அறிமுக மாநாடு எழும்பூர் கென்னட் லேன் சிங்கப்பூர் பிளாஸாவில், மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.காயல் பட்டிணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி எஸ்.சையிது அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அகில இந்திய ஜம்மீயத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்,கேரள மாநிலம்,காந்தபுரம் கமருல் உலமா,மௌலானா மௌலவி அல்லாமா ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் ஆலிம் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசு தலைமை காழி டாக்டர்,மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூபி ஹஜ்ரத்,ஜே.எம். ஹாரூன் எம்.பி.அவர்கள்,மௌலானா நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஆலிம்,மௌலானா முஹம்மது ஹாரிஸ் ஷக்காஃபி ஆலிம்,கோவை மௌலானா அப்துல் ஹக்கிம் ஆலிம்,மௌலானா சலீம் சிராஜி ஆலிம் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

ஈரோடு திருநகர் காலனி ஹாஜியானா அரங்கில் மார்ச் 3-ஆம் தேதி சனிக்கிழமை மாலை மீலாது விழா நடைபெற்றது. இதில் சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி எம்.அபூத்தாஹிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

திருநெல்வேலியில் சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மீலாது பெரு விழா, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா டி.ஜே.எம் ஸலாஹூத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இதில் சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு அமைப்பாளர் பேராசிரியர் சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானிய அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா எஸ்.எஸ்.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள்,சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா முஹம்மது ரிழா ஆலிம் அவர்கள்,சென்னை ரஹ்மத் பதிப்பக மேலாளர் மௌலானா முஹம்மது கான் பாகவி ஆலிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இதில் ஏராளமான உலமாப்பெருமக்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில்,உத்தம திருநபியின் உதய தின ஆன்மீக மாநாடு மார்ச் 11-ஆம் தேதி,ஆலிம் புலவர்,மௌலானா முஹம்மது ஹுஸைன் ஆலிம் மன்பஈ தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்கள்.மௌலானா அஹ்மது அப்துல் காதிர் ஆலிம்,எஸ்.எஸ்.புஹாரி மௌலானா, முஹம்மது யாஸின் ஆலிம் பாகவி,இமாம் அப்துஸ்ஸலாம் ஆலிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இந்த மாநாட்டை கொடிக்கால் பாளையம் ஏகத்துவ மெய்ஞான சபை ஸூஃபி மன்ஜில் இணைந்து நடத்தியது.

சென்னைப் புதுக்கல்லூரி அரபித் துறையின் மாணவர் பேரவையான (arabic study circle) அரபிக் ஸ்டடி சர்கிளின் நிறைவு விழா மார்ச் 8-ஆம் தேதி கல்லூரியின் கனினி அரங்கில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் டாக்டர் கே.அல்தாப் தலைமை தாங்கினார்கள்.புதுக்கல்லூரியின் அரபித்துறைப் பேராசிரியர்,டாக்டர்.கே.எம்.ஏ.அஹ்மது ஜூபைர் எழுதிய ''முன்தகபாத் மினல் ஷிரில் அரபியில் முஆசிர்'' என்ற அரபி நூல் வெளியிடப்பட்டது.டாக்டர் கே.அல்தாப் வெளியிட,தமிழ் நாடு அரசு காஜி (காழி) டாக்டர் மௌலானா ஸலாஹூத்தீன் முஹம்மத் அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்கள்.

மல்லிப்பட்டினம் முஹ்யத்தீன் ஆண்டகை பள்ளி வளாகத்தில் மார்ச் 12-ஆம் தேதி மீலாதுப் பெரு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஹுஸ்னுல் ஃகாத்திமா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வரும்,மஜ்லிஸுல் உலமாத் தலைவருமான,மௌலானா மௌலவி கே.எஸ்.ஏ.அப்துர் ரவூப் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.விழாவில் மௌலானா முஹம்மது கௌது ஆலிம்,மௌலானா முஹம்மது ஷஃபியுல்லாஹ் பாகவி,மௌலானா கலிபுல்லாஹ் ரஹ்மானி ஃபாஜில் மன்பஈ,மௌலானா ஷாஹுல் ஹமீது மஹ்ழரி,மௌலானா அப்துஸ் ஸமது உலவி ஃபாஜில் ஜமாலி ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இவ்விழாவில் மௌலானா மௌலவி அபூத்தாஹிர் பாகவி ஆலிம் சிறப்புரையாற்றினார்கள்.விழாவின் இறுதியில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா,அபுதலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் மீலாது சிறப்புப் பேருரை வழங்கினார்கள்.மௌலானா மௌலவி எஸ்.அய்யூப்கான் ஆலிம் மன்பஈ நன்றி கூறினார்கள்.

கோவை கோட்டை மன்பவுல் உலூம் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மார்ச் 18-ஆம் தேதி கோவை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மீலாது விழா நடைபெற்றது.விழாவில் பெஙகளூர் ஸபீலுர் ரஷாத் அரபுக்கல்லூரியின் பேராசிரியர், மௌலானா அல்ஹாஃபிழ் ஸைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மௌலானா அபுல் ஹஸன் பாகவி ஹஜ்ரத்,மௌலானா முஹம்மது அலி இம்தாதி ஹஜ்ரத் ஆகியோரும் பேசினார்கள்.விழாவில் ஏராளமான உலமாப் பெருமக்களும்.பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

சென்னை மௌலானா மு.அ. ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி ஆலிம் அவர்களின் இல்லத் திருமணவிழா சென்னையில் ஹஜ் கமிட்டி திருமண மண்டபத்தில் மார்ச் 24-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில் டாக்டர் மௌலானா மௌலவி அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில் எம். ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்களும்,முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர்,கே.எம். காதர் முகைதீன் அவர்கள்,மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இறுதியில் இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் எழுதிய கஸீதத்துல் முஹம்மதிய்யா என்ற அரபி நூலின் தமிழ் மொழி பெயர்ப்பும் வெளியிடப்பட்டது. 

வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம்.
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு