மன்பஈ உலமா பேரவை தொடக்கம்.நூற்றுக் கணக்கான மன்பஈ உலமாக்கள் பங்கேற்பு!


தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க கல்விக் கேந்திரமாக விளங்கும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறும் மாணவர்களுக்கு மன்பஈ என்கிற பட்டம் வழங்கப்படுகிறது.

கடந்த 150 ஆண்டுகளாக மிக சிறந்த மார்க்க கல்வியை ஊட்டி வரும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா அடுத்த மாதம் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் வேளையில் உலகம் முழுவதும் பரவிப் பணியாற்றும் மன்பஈ உலமாக்களை ஒன்றிணைக்கும் முகமாக மன்பஈ உலமா பேரவை துவக்க விழா  07/05/2013 செவ்வாய்க் கிழமை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் நடைப்பெற்றது.


பேரவை தொடக்க விழா கூட்டத்திற்கு மெளலானா முப்தி அஷ்ரப் அலி மன்பஈ தலைமை வகித்தார்கள். மெளலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ வரவேற்றுப் பேசினார்கள். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.

ஜாமிஆ முதல்வர் மெளலானா ஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத், ஆவூர் அப்துல் ஷக்கூர் மன்பஈ,மதுரை பி.கே.என்.அப்துல் காதிர் மன்பஈ,மெளலானா ஹாமித் பக்ரி மன்பஈ, முகவை பஷீர் சேட் மன்பஈ,திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் மன்பஈ, முகவை கவிஞர் உமர் ஜாபர்மன்பஈ, இனையாங்குடி மெளலானா முஹம்மது ராஜூக் மன்பஈ நிறைவுரையாற்றினார்கள்.பள்ளப்பட்டி மெளலானா முஹிபுல்லா மன்பஈ துஆ செய்தார்கள், மெளலானா முஹம்மதுஅன்சாரி மன்பஈ நன்றி கூரினார். இன் நிகழ்ச்சியில் ஏராளமான மன்பஈ உலமாக்கள் பங்கேற்றனர் .


நிர்வாகிகள் தேர்வு

ஜாமிஆவின் முதல்வர் மெளலானா ஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் தலைவராகவும், மெளலானா 
முஃப்தி அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத்,மெளலானா முஃப்தி அஷ்ரப் அலி மன்பஈ ஹஜ்ரத் ஆகியோர் கவுரவத் தலைவராகவும், முஹய்யதீன் அப்துல் காதர் மன்பஈ செயலாளராகவும்,  
தேர்வு செய்யப்பட்டனர்.வஸ்ஸலாம்..

நன்றி ;- lalpet.net மற்றும் lalpet express.இணைய தளத்தினருக்கு.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு