அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, November 30, 2013

மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா!!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடயீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நற் கிருபையாலும்,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியாலும், முஹர்ரம் பிறை 20, (24-11-2013) ஞாயிற்றுக்கிழமை Kandiah Hall SJK (T) Vivekananda, Jalaln Vivekananda, Brickfields, கோலாலம்பூரில் மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பமாக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ அவர்கள் திருமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பின்பு கிராஅத் போட்டி சிறு பிள்ளைகளுக்கு நடைபெற்றது.பதினோறு குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.அனைவரும் சிறப்பான முறையில் ஓதினார்கள். நடுவராக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ பணியாற்றினார். பின்னர் வருசை ஜுவல்லர்ஸ் உரிமையாளரும்,மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி வருசை முஹம்மது அவர்கள்,தலைமை உரையாற்றினார்கள்.பிறகு பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யாவின் முதல்வர்  மௌலானா மௌலவி அல்ஹாஜ் மு.முஹம்மது ஹபீப் ஆலிம்.மன்பயீ அவர்களும், நாடறிந்த எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் அவர்களும்,சிறப்புறையாற்றினார்கள்.பிறகு சித்தார் கோட்டையச் சேர்ந்த மலேசிய மேஜிக் மேன், ஹஸன் 
முஹம்மது அவர்கள் மேஜிக் செய்து காட்டி அனைவரையும்சந்தோசப்படுத்தினார்.


பிறகு பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யாவின் முதல்வர் 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் மு.முஹம்மது ஹபீப் ஆலிம்.மன்பயீ அவர்கள் புனித ஹஜ் என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோ C.D வெளியிடப்பட்டது.இதை நமது மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இன்னும் மலேசிய நாகூர் ஹனீஃபா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பாடகர்  ஹாஜி செய்யது அலி அவர்கள், இஸ்லாமிய பாடல்களைப்பாடி அனைவரையும்  மகிழவைத்தார்கள்.


பின்னர் சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை மலேசியத் தொலைக்காட்சி தமிழ் பிரிவில் பணிபுரியும், சித்தார் கோட்டையைச் சார்ந்த நூருல் அவர்கள் சிறப்பாக நடத்திவைத்தார்கள்.  
பின்பு Lucky Draw நடைபெற்றது. ஏராளமானோர் பரிசுகளை அள்ளிச் சென்றார்கள்.இந்த விழாவை முன்னிட்டு  ஆண்களுக்கும்,பெண்களுக்கும்,விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.ஆண்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு,Selayang,Restoran Barakath Corner  சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.அதன் உரிமையாளர்கள்,ஹாஜி மு.முஹம்மது ஜமீல்,
மற்றும் ஹாஜி.எஸ்.முஹம்மது அபுல் பரக்கத்,ஹாஜி.எஸ்.ஹாஜா முஹைதீன்  ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.பெண்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு,
மலேசியத் தலைநகரில் உள்ள வருசை ஜுவல்லர்ஸ்  சார்பாக
 பரிசுகள் வழங்கப்பட்டது.அதன் உரிமையாளர்,ஹாஜி வருசை முஹம்மது அவர்கள், மற்றும் அவரது குடுபத்தார்கள் பரிசுகளை வழங்கினார்கள். 
நிகழ்ச்சிகளை  மலாய் மொழியில்  பிரபல Educational Motivotar (கல்வி ஊக்குவிப்பாளர்) ஃபைஜல் அவர்களும்,தமிழில்,அஜ்லான்,மற்றும் இம்ரான் ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யாவின் 
முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் மு.முஹம்மது ஹபீப் ஆலிம்.மன்பயீ அவர்கள்சிறப்பு துஆ ஓதினார்கள்.நிகழ்ச்சிகள் அனைத்தையும், மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கம்  மற்றும்,
(BRICK) என்று சொல்லப்படும், மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் இளைஞ்ர் சங்கமும் இணைந்து மிகச்சிறப்பாக நடத்தி முடித்தார்கள். 

இந் நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரளாக 
கலந்து கொண்டார்கள்.வஸ்ஸலாம்.


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு