Posts

ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி

Image
ஸ்தாபிதம் ; 2001   சித்தார் கோட்டை -623513    இராமநாதபுரம் (Dt)     ph; 04567-261799 E-Mail ; chittariyya@gmail.com                அன்புடையீர் !                       அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் பேரருளால் இக்கல்லூரியில் ஒவ்வொரு ஜூன் மாதம் முதல் கீழ் கண்ட மூன்று முறைகளில் மார்க்க கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இக்கல்லூரியில் அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில் அஃப்ழலுல் உலமா படிப்புடன் கம்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு கால '' மௌலவி ஆலிம் '' ( இஸ்லாமிய்ய மார்க்க ) பட்டப்படிப்பு பயில்வது . கல்லூரி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் + 2 வரை பயில்வது , ஐவேளை தொழுகை , நல்லொழுக்கப் பயிற்ச்சி , கம்யூட்டர் கலை , அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளில் சரளமாக பேச , எழுத அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற திறமை மிக்க ஆசிரியர்களைக்கொண்டு பயிற்ச்சியளித்தல் .  தஜ்வீது கலையுடன் கூடிய மூன்று ஆண்டு கால ஹிஃப்ழுல் குர்ஆன் 

அரபுக்கல்லூரிகள் துவங்கியது!!!

Image
பிஸ்மிஹி தஆலா எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக்கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால் முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல் அதாவது காலை மதரஸாக்களுக்குகூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளை விட்டும் விலகி வாழ்ந்தார்கள்.

-; பயனுள்ள தொலைக்காட்சி ;-

பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன் தொலைக்காட்சி மிகவும்   சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சேவையை     வழங்கிக் கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ் சமீப காலமாக தமிழகத்தில்   வழி கெட்ட தீய சக்திகள் தனது வழிகெட்ட தவறான தொலைக்காட்சி    நிகழ்ச்சிகளை    வழங்கி    இஸ்லாமிய சமுதாய     மக்களை வழிகேட்டின் பக்கம்   அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் வழிகேடானா பிரச்சாரங்களுக்கு   மத்தியில்   மக்களுக்கும் ,   வழிகேட்டில்   மூழ்கி கெடக்கும் வாலிபர்களுக்கும் உண்மையை தெளிபடுத்து வதற்காக , மூன் தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது . இத்தொலைக்காட்சியில் அதிகாலை   முதல் நள்ளிரவு   வரை அதிகமான சிறப்பு   வாய்ந்த   நிகழ்ச்சிகள் அரபுநாடுகள் ,  இலங்கை ,  மற்றும்   இந்தியா    முழுவதும் வழங்கப்படுகிறது . நிகழ்ச்சிகள் சிறந்த காரீகளால் கிராஅத் ஓதப்பட்டு துவக்கம் செய்யப்படுகிறது . 1 வது இன்று ஒரு நபி மொழி என்ற நிகழ்வை மௌலானா மௌலவி    ஹஜ்ரத் ஸாலிஹ் சேட் ஆலிம் பாகவி அவர்களும் , 2 வது சிந்திப்போமா என்ற ந

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு