Posts

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

    பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!      மௌலானா டி,ஜெ,எ. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும் . எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும் . புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா , உத்தம நபியின் உதய தின விழா , மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும் . கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி ( ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ , விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது மீலாது விழாக்களில்  அனாச்சாரம் ,   ஆடம்பரம் , கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது . மனித சமுதாயத்தின் உயர்வுக்கும் , ...

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில் மீலாதுப் பெருவிழா

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!                 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை மாநகருக்கு புனிதம் சேர்க்கும்  ''ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில்'' ''லஜ்னத்துல் லம்ஆன் மாணவர் மன்றம்'' சார்பில், மீலாதுப் பெருவிழா-   (16-02-2011) -புதன் கிழமை மாலை மூன்று மணியளவில் இனிதே தொடங்கியது.  கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் மௌலானா அல்ஹாஜ் கீழக்கரை ஹுஸைன் அப்துல் கரீம் மன்பஈ ஹழரத் தலைமை தாங்க, மாணவர் ஜியாவுல் ஹக்  திருமறை ஓத, முஹம்மது ரிஷாத், மற்றும் முகம்மதியா பள்ளிகளின் முன்னால் ஆசிரியர் E.M. ஹனீஃபா  அவர்கள்  கீதம் பாட விழா இனிதே துவங்கியது.  மாணவர் மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஃபைஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். ஆரம்பமாக கல்லூரியின் தாளாலர் மௌலவி அல்ஹாஜ் சுதானா முஹம்மது ஆலிம்  அரூஸி,ஃபாஜில் ஜமாலி துவக்கவுரை ஆற்றினார்கள்.  கல்லூரிப் பேராசிரியர்கள், மௌலவி அல்ஹாஜ் செய்யிது அபுத்தாஹிர் ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி, ...

பெருமானாரின் மீலாது ஊர்வலம்

முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!                    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (16-2-2011) அன்று செவ்வாய் கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.செவ்வாய் கிழமை காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்கள்,மற்றும் மா...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு