-; பயனுள்ள தொலைக்காட்சி ;-
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன் தொலைக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ் சமீப காலமாக தமிழகத்தில் வழி கெட்ட தீய சக்திகள் தனது வழிகெட்ட தவறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் வழிகேடானா பிரச்சாரங்களுக்கு மத்தியில் மக்களுக்கும் , வழிகேட்டில் மூழ்கி கெடக்கும் வாலிபர்களுக்கும் உண்மையை தெளிபடுத்து வதற்காக , மூன் தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது . இத்தொலைக்காட்சியில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அதிகமான சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் அரபுநாடுகள் , இலங்கை , மற்றும் இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது . நிகழ்ச்சிகள் சிறந்த காரீகளால் கிராஅத் ஓதப்பட்டு துவக்கம் செய்யப்...