Posts

சென்னை -- திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்தும் மாபெரும் இரண்டு நாள் மாநாடு.

Image
நவீன உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாமே தீர்வு ஜமாஅத்துல் உலமா மாநாடு. இன்ஷா அல்லாஹ், நாள் ; ஏப்ரல் 27, 28 -2013 சனி, ஞாயிறு. இடம் ; குராசானி பீர் தர்ஹா மஸ்ஜித்,  L.B.ரோடு,அடையாறு,சென்னை --20. முதல் அமர்வு ; 9.30 - 1.00  பல்துறை ஆலிம்களின் அனுபவங்களும்,வழிகாட்டுதல்களும். ஆலிம்களுக்கு மட்டும். தலைமை ; மௌலவீ,அல்ஹாஜ் Dr.P.சையது மஸ்வூது ஜமாலி MA.,Ph.D வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,K.M.அபூதாஹிர் ஸிராஜீ வழிகாட்டுரை வழங்குவோர் ; மௌலவி அல்ஹாஜ், Y.அப்துல் கரீம் ஜமாலி ( Ex.தமிழக அரசு மாவட்ட வருவாய் அதிகாரி) மௌலவி,அல்ஹாஜ், A.ஹஸன் அலி ஜமாலி (ஜமாஅத் தலைவர் S.P.பட்டிணம்) மௌலவி,அல்ஹாஜ், S.அப்துல் கபூர் ஜமாலி,Bsc., (தொழிலதிபர்,திண்டுக்கல்) மௌலவி,அல்ஹாஜ் P.மக்தூம் ஷா ஜமாலி,M.Com (துணைத் தலைவர் ;  அரசு பதிவுத்துறை,நெல்லை மாவட்டம்) மௌலானா S.முகமது அபூதாஹிர் M.Com.,M.L., ( மாவட்ட ஷெஸன்ஸ் நீதிபதி & கூடுதல் இயக்குநர்,தமிழ்நாடு நீதிபதிகள் பயிலரங்கம்,சென்னை.) மௌலவி, அல்ஹாஜ், M.K.அலாவுதீன் பாகவி ( இமாம் ; மஸ்ஜித் ஜாவித், அண்ணாநகர் ) மௌலவி, Dr.M.ஜ...

மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா

Image
மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் நினைவு விழா,புத்ரா ஜெயா, மஸ்ஜிது மிஜான் ஜைனல் ஆபிதீனில், ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் பிறை 4,மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சி மாலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கியது.4-45 மணிக்கு மார்க்க மேதைகளான பேச்சாளர்களும்,பொதுமக்களும்,வி சேச அழைப்பாளர்களும்,ஒன்று கூடினார்கள்.5.00 மணிக்கு, பங்களா தேசைச் சேர்ந்த காரீ,ஷைஹ் அஹ்மது பின் யூசுஃப் அல் --அஜ்ஹரி அவர்கள் திருமறை ஓதி, ஆன்மீக மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.இந்த ஆன்மீக மாநாட்டினை,மலேசிய அரசாங்கமும், அமானா -- அல் வாரிஸீன் என்ற அமைப்பும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  5-10 மணிக்கு அமானா  -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், துஆ ஓதி  ஆரம்பித்து வைத்தார்கள். 5-15 மணிக்கு யாயாஸான் அல் --ஜென்டேரமி,மலேசியாவின் ஆலோசகர்,மரியாதைக்குரிய,ஷைஹ் முஹம்மது ஹஃபீஜ் பின் ஹாஜி ஸலாமத் அவர்கள்...

வாழ வழியா இல்லை பூமியில் !!!

Image
அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 4 ; 97 ) வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் எதிர் நீச்சல் போடத்தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை.அதில் மேடு பள்ளமும்,சுழியும்,பாறைகளும் நிறைந்திருக்கும் வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதிவிடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பை பயன்படுத்த வேண்டும்.அந்த துடுப்பு எது? அது தான் ஈமான் என்னும் நம்பிக்கை.இறைநம்பிக்கை என்பது இறையிருப்பை ஏகத்துவத்துவத்தை ஏற்பது மட்டுமல்ல.அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்,''  ( 9 ; 40 ) அவன் எப்பொழுதும் நம்மை கைவிடமாட்டான்.நமக்கு உதவி செய்வான்.நாம் வெற்றி இலக்கை அடைந்தே தீருவோம் '' என்ற உறுதியான விசுவாசமும் ஆகும்.  இந்த வகையில்,தன்நம்பிக்கை என்பதும் ஈமானில் ஒரு அங்கமே.வாழ்க்கை என்றால் வேதனைகளும்.சோதனைகளும்  சகஜம்.சங்கடங்கள் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்டவேண்டும்.முழு வெற்றி -- சக்சஸ் ஃபுல்,சாகஸம் செய்தாலே சாத்தியமாகும்.இது சரித்திர...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு