Posts

உழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் !!!

Image
துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு “குர்பானி” என்று பெயர். இதே பொருளில் தான் “உழ்ஹிய்யா” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல் குர்ஆன் 22:34 (நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக ! அல் குர்ஆன் 108:3 என்று அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்தஆலாவிற்குப் பிரியமான வேறு எந்தசெயலும் இல்லை. (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமை நாளில் அவைகளின் கொம்புகளுடனும், கால் குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி. உழ்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மையை நாங்கள் பெறுவோம்? என்று ஸஹாபாக்கள் வினவிய போது, அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன்மைய...

குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.Qurbani in the view of Shariah

Image
தொகுப்பு: சையத் ஷாஹ் வஜீஹுன்னகீ  சக்காப் ஷுத்தாரில் காதிரி அவர்கள் குர்ஆன் கூறுகிறது 'அதன் (குர்பானியின் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும் உங்களின் தக்வா(பயபக்தி)தான் அவனை சென்றடைகிறது'. –அல்-குர்ஆன் 22:37. அல்லாஹ் மேலும் கூறுகிறான். 'எனவே நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்' –அல்-குர்ஆன் 37:107 ஹஜ்ரத் இப்றாகிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  அல்லாஹ் அனுப்பி    வைத்த செம்மறி ஆட்டை  குர்பானி கொடுத்தார்கள் –தப்ஸீர் குர்துபி ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி  மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும். குர்பானி யார் மீது கடமை? இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'தமது  ஊரில் தங்கி இருக்கக் கூடிய வசதியான அடிமைகளாக இல்லாத  சுதந்திரமான முஸ்லிம்களின் மீது குர்பானி கொடுத்தல்  வாஜிபு' எனக் கூறுகின்றனர். குர்பானி கொடுக்கக் கூடிய நபரின் பொருளாதார வ...

அறியவேண்டிய அரஃபா நாள் !!!

Image
عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال :  «أفضلُ الأيام يومُ عرفة நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும்.  (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் ) இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும். سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ  « صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة » அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425) அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765) அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766) இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு