Posts

வலிகள் வந்தாலே பிரசவம்!

Image
' 'அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி வருவதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படி செய்தோம் '' அல்குர்ஆன் 32 ; 21 நீ, திருந்தி அவனிடம்  திரும்பி  வரவேண்டும் என்பதற்காகத்தான் அவன் உனக்கு சிறிய வேதனையைத் தருகின்றான். சந்தோஷங்கள் உன்னை இறைவனை விட்டும் தூரமாக்கும் போது கவலைகள் தாம் உன்னைக்கட்டிப்போட்டு அவனிடம் கொண்டு போய்ச்சேர்க்கின்றது. மௌலானா ரூமி கூறுவார்கள் ; தாய்மார்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படாதவரை குழந்தை பிறப்பதற்கு  வேறு வழி எதுவும் கிடையாது.அதாவது வேதனை மிகவும் முக்கியமானது.ஞானமெனும் அமானிதம் உள்ளத்தில் இருக்கின்றது. உயிரோ அதை கருவுற்றுள்ளது. மற்றபடி இந்த அறிவுரைகளெல்லாம் அமானிதத்தை வெளிக்கொணர்வதற்கு தாதியைப் போன்றது.தாதியானவள் கூறுகிறாள் ; பெண்ணுக்கு இன்னும் பிரசவ வேதனை ஏற்படவில்லை.அந்த வேதனை ஏற்ப்பட்டால் தான் குழந்தை பிறப்பதற்கு வழி உண்டாகும்.அதாவது அறிவுரைகள் பயன்தரவில்லை என்றால் நன்மையின் செயல்பாடுகள் எதுவும் நடைபெறாது.  '' மஸ்னவி ஷரிஃபு. உனக்கு வலி வந்தாலே உன்னிடம்

சால்னாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டுக்கும் வழங்கிடுவீர்!

Image
நபித்தோழர் அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.எனக்கு எனது நேசர் நபி (ஸல்) அவர்கள் மூன்று உபதேசம் செய்தார்கள். (1) தலைமையின் சொல் கேளு,கட்டுப்படு, அந்த சொல் மூக்கு அறுபட்ட அடிமைக்குரியதாக இருப்பினும்சரி, (2) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து,பின்னர் உனது அண்டை வீட்டுக்காரர்களைப்பார்த்து அவர்களுக்கு அதிலிருந்து கொடுத்து விடு. (3) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு (நூல் --- முஸ்லிம்) இனியசகோதரா! இம்மூன்று உபதேசத்தை நீயும் செயல்படுத்து, முதலாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது,தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பிலுள்ளவர் என்று பொருள்.எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித் தலைவர்,குடும்பத்தலைவர், நீசார்ந்த அமைப்பின் தலைவர்,பணிசெய்யும் நிறுவனத்தலைவர்,இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதன் மூலம் '' நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,அவனது தூதருக்கும்,உங்களில் அதிகாரமுள்ளவருக்கும் வழிப்படுங்கள்'' (4;50) என்ற இறைவாக்கை காப்பாற்றுங்கள்.புகாரி (7144) முஸ்லிமுடைய அறிவிப்பில் '' விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலைமையின் சொ

ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!

Image
ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன். அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து  தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251) அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு