Posts

மன்பஈ உலமா பேரவை தொடக்கம்.நூற்றுக் கணக்கான மன்பஈ உலமாக்கள் பங்கேற்பு!

Image
தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க கல்விக் கேந்திரமாக விளங்கும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறும் மாணவர்களுக்கு மன்பஈ என்கிற பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த 150 ஆண்டுகளாக மிக சிறந்த மார்க்க கல்வியை ஊட்டி வரும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா அடுத்த மாதம் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் வேளையில் உலகம் முழுவதும் பரவிப் பணியாற்றும் மன்பஈ உலமாக்களை ஒன்றிணைக்கும் முகமாக மன்பஈ உலமா பேரவை துவக்க விழா  07/05/2013 செவ்வாய்க் கிழமை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் நடைப்பெற்றது. பேரவை தொடக்க விழா கூட்டத்திற்கு மெளலானா முப்தி அஷ்ரப் அலி மன்பஈ தலைமை வகித்தார்கள். மெளலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ வரவேற்றுப் பேசினார்கள். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். ஜாமிஆ முதல்வர் மெளலானா ஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத், ஆவூர் அப்துல் ஷக்கூர் மன்பஈ,மதுரை பி.கே.என்.அப்துல் காதிர் மன்பஈ,மெளலானா ஹாமித் பக்ரி மன்பஈ,

அஜ்மீர் அரசியல் !!!

Image
சென்ற வருடம்,ஏப்ரல் 8 ம் தேதி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு நாள் சொந்த முறைப் பயணமாக இந்தியா வந்தார். 'சுல்தானுல் ஹிந்த்' என்றும் 'கரீப் நவாஸ்' என்றும் புகழப்படுகிற அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வந்த அவரை  மதிய விருந்துக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நெ 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்ட சர்தாரி, பிரதமர் மன்மோகனுடன் தனிமையில் நேருக்கு நேர் 45 நிமிடங்கள் உரையாடினார்  மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றம் சாட்டுகிற ஜமாத்து தாவா அமைப்பின் தலைவர் ஹாபிழ் முஹம்மது சஈதை கைது செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், உலகின் நியாயவான்(?) அமெரிக்கா ஏப்ரல் 2012 ல் அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்தது. அதன் எதிர் நடவடிக்கையாக பாகிஸ்தானை பூர்வீமாக கொண்டு இங்கிலாந்தின் ரோதர்ஹாமில் Rotherham  வசிக்கிற பெரும் பணக்காரர் லார்டு பீர் அஹ்மது, அதிபர் ஒபாமாவ

உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாமே தீர்வு’ எனும் கொள்கையை பரவலாக்க, உலமாக்கள் உழைக்க வேண்டும்

Image
                                      ஒவ்வொரு பகுதியிலும் ஷரீஅத்,குர்ஆன் பிக்ஹு,மீலாது மாநாடுகள்,உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாமே தீர்வு' எனும் கொள்கையை பரவலாக்க, உலமாக்கள் உழைக்க வேண்டும் என்று, ஏப்ரல் 27, 28 தேதிகளில், சென்னை அடையார் குராசானி பீர் தர்ஹா மஸ்ஜிதில் நடைபெற்ற, ஜமாஅத்துல் உலமா மாநாட்டில் வேண்டுகோள் விடப்பட்டது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கிட உழைப்பதும்,உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் வழியில் தீர்வு காண்பதும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றும் எம் நோக்கத்தில் இஸ்லாத்தின் மாண்புகளை மென்மேலும் பரவலாக்கும் முயற்சியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஷரீஅத் மாநாடுகள், மீலாது விழாக்கள்,குர்ஆன் மாநாடுகள், ஃபிக்ஹ் மாநாடுகள், சமூக விழிப்புணர்வு மாநாடுகள் போன்றவை நடத்தப்பட வேண்டும். "உலகின் எல்லாப் பிரச்சினை களுக்கும் இஸ்லாமே தீர்வு'' என்ற கொள்கையைப் பரவலாக்கிட உலமாக்கள் உழைத்திட வேண்டும். 2. நம்முடைய முன்னோர்கள் இறைவனின் திருப்தியை மட்டுமே நாடி வக்ஃ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு