Posts

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் -- முதல் பாகம்

Image
ஒடுக்கம் என்பது பழம் தமிழ்ச் சொல்லாகும்.இது  பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்ட போதினும்  முக்கியமாக முடிவு,இறுதி என்ற பொருள்களிலேயே  பயன்படுத்தப் படுகிறது..சிலப்பதிகாரத்திலும் ஒடுங்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின் முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே என்ற அடிகளில் முடிவு அல்லது இறுதி என்ற  பொருளிலேயே இது .பயன்படுத்தப் பட்டுள்ளது இதே பொருளில் அல்லாஹ்வின் இறுதித் தூதுவராம்  முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களை ஒடுக்கத்து நபி என்றும் நியாயத் தீர்ப்பு  நாளை ஒடுக்கத்து நாள் என்றும் ஒருவரின் இறப்பு   நேரத்தை ஒடுக்கம் என்றும் கூறுவர். ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் கிழமைக்கு  ஒடுக்கத்துப் புதன் என்று பெயர். .இதற்கு உர்தூவில் ஆகி ஷம்பா என்று கூறுவர்.ஹூத்  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் மீது  அல்லாஹ்வின் முனிவு ஏற்பட்டு அதன் விளைவாக,  இதற்கு  முன்னுள்ள புதன் கிழமையிலிருந்து இப்புதன்  கிழமை வரையில் கடுங்காற்று வீசி அவர்களை அழித்தொழித்தது. அந்த காற்று வந்த  நாளை ''யவ்முந் நஹ்ஸ் ( கெட்ட நாள் )  என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிற

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு