Posts

ஏ.பி.ஜே . அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Image
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும், நம் எல்லோருக்கும் தெரிந்த மாமனிதர் மர்ஹூம் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில்,இராமேஸ்வரம் பள்ளிவாசலின் இமாம்,மர்ஹூம் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களுக்கும், மர்ஹூமாஆஷியம்மாவுக்கும் மகனாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்கள். . இளமைப் பருவம்: மர்ஹூம் அப்துல் கலாம் அவர்கள், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார்கள். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

Image
குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள். அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' வ

தனது வாழ்நாள் வரை, தன் சொந்த செலவில் நோன்பு கஞ்சி வழங்கியவர்கள் !!!

Image
இராமேஸ்வரத்தில்,தனது சொந்த மஹல்லாவில், ரமலான் மாதம் முழுவதும், தனது வாழ்நாள் வரை,  தன் சொந்த செலவில் நோன்பு கஞ்சி வழங்கியவர்கள்.  மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள். மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின்  பள்ளிவாச லில் இமாமாக இருந்தவர்கள்,  மர்ஹும்  A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்களின் தந்தை  ஆவுல் ஃபக்கீர் ஜைனுல் ஆபிதீன் ஆலிம் அவர்களா கும். மர்ஹும் A.P.J.அப்துல் கலாம் சாஹிப் அவர்கள். ஒரு ஆலிம் ஈன்றெடுத்த தவப்புதல்வராகும். யா அல்லாஹ் இந்த மாமனிதர்களுக்கு உயர் பதவி வழங்குவாயாக ஆமீன். வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு