Posts

மீலாது விழாவின் அடிப்படை நோக்கங்கள்

Image
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!  மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் : மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.  அல்லாஹுதஆலா கூறுகிறான்: "அல்லாஹ

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

Image
பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!! மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக்  கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும். எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ, விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது. மீலாது விழாக்களில் அனாச்சாரம், ஆடம்பரம்,கேளிக்கூத்துகள் எதுவ

மலேசியா வாழூர் ஜமாஅத்தின், குடும்ப தின விழா !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் மலேசியா வாழூர் ஜமாஅத்தின்,  குடும்ப தின விழா, 06-12- 2015 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது . அது சமயம் இச்சிறப்பு மிகு விழாவை முன்னால் மலேசிய  நிதி அமைச்சர் டத்தோ நூர் முஹம்மது யாக்கூப்  அவர்கள் தலைமையேற்று நடத்தி தர இருக்கிறார்கள். ஆகவே மலேசியா வாழ், வாழூர் ஜமாஅத்தார்கள்  அனைவர்களும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வாழூரில் சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  24-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், வாழூர் ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை  பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட  12 தலைப்புகளில்  சிறப்புப் பேருரையாற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை, மௌலானா மௌலவி  எஸ்.சுலைமான் அலி ஆலிம் கைரி அவர்கள் கிராஅத்  ஓதி துவக்கி வைத்தார்கள். சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் இமாம்,மௌலானா  மௌலவி அல்-ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி  ஹஜ்ரத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இறுதியாக வாழூர் ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் ஆரிஃப்கான் நூரி நிஜாமி  ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு துஆவோடு மஜ்லிஸ் நிறைவு பெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய முப்பெரும் விழா !!!

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சாம்பிராணியும் ஷிர்க்கும் !!!

Image
உரை நிகழ்த்துபவர்: இலங்கை மௌலானா  மௌலவி  அஸ்செய்யத் அலவி (முர்ஸி) ஹழ்ரத் அவர்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சாம்பிராணிக்கு என்று மருத்துவ குணங்கள் இருக்கின்றன !!!

Image
பிரசவ வீட்டில் பிள்ளைகளின் கழிவுகள் ... தாய்மார்களின் நிபாஸ் எனும் துடக்குகளின் நாற்றம் ..போன்றவைகளை சாம்பிராணியின் வாசம் மிகுந்த அந்த புகை ..நீக்கும் கிருமி நாசினியாகவும்.... துர்வாடைகளை நீக்கி மனதுக்கு உகந்த மணங்களை,,சாம்பிராணி ,,குங்கிலியம் ...போன்ற வஸ்துகளை உபயோகிக்க அல்லாஹ் வழங்கியுள்ள நிஹ்மத் ! அரபியர்கள் இப்போதும் பஹூர் எனும் சாம்பிராணியும் வூத்..எனும் நறுமண கட்டையையும் பல லட்சம் கொடுத்துக்கூட வாங்குகிறார்கள் ! எனக்கு இவ்வுலகில் பிடித்தது முதலில் நறுமணம் ..என்று தான் ..கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் சொன்னார்கள் ! ஆதலால் குளிதத்துமே..இன்றும் கூட அரபி அந்த சாம்பிராணி யான அகில் ..ஊத் ..பஹூர்..என்பதை எலெக்ட்ரானிக் சாம்பிராணி சட்டியில் போட்டு எரித்து அதன் புகையை தன் உடல்முழுதும் படும்படியாக ,,,வெற்றுடம்பில் நின்று ஏற்றிக்கொள்வார்கள் ! அராபிய பெண்ணோ..ஆணோ..தூரத்தில் வந்தால்கூட கண்டுக்கொள்ளலாம் ..அவர்கள் மேல் உள்ள நறுமணத்தை ! அது சாதாரண பெர்புயூம் கிடையாது ! சாம்பிராணி புகையால் தன் உடம்பை வாசம் கொடுதுக் கொண்டதுதான் ! நம்மவர்கள் அத்தரையும் செண்டையும்,,,சட்டையில் அப்பிக

ஒடுக்கத்து புதன் அன்று கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என சொல்கிறார்களே அது மார்க்கத்தில் இருக்கா ?

Image
மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர். அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்துப் புதன் ஓர் ஆய்வு !!!

Image
கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். 'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர். பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233 குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது. நன்றி: வஸீலா 1-11-87 ஒடுக்கத்துப் புதன்  بسم الله الرحمن

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.  “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை  இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு. -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர்

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)

Image
நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.  (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.                                         بسم الله الرحمن الرحيم سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. ا

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?

Image
யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..  உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது,

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு