அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Tuesday, May 13, 2014

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ்சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது..

வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பி.எஸ்.அப்துர் ரகுமான் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, இங்கு 45 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி பரிமாற்றம் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் உலகெங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றனர்.

அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆய்வுத்திறனை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் வழிகாட்டுதலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது.


தற்போது தேசியத் தர அங்கீகாரக் கவுன்சில் வழங்கியுள்ள ஏ கிரேடு சான்றிதழ் கிடைத்திருப்பதால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தி புதிய படிப்புகள், ஆய்வு நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு