சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம் சிறப்பாக நடந்து முடிந்தது





முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' 
என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் 
அவர்களின் 47 வது நினைவு தினம்.மிகச்சிறப்பாக 
நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.



இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை 
சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,நடைபெற்றது.அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப்பின்,பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு 
குர்ஆன் ஷரீஃப் ஓதப் பட்டு,கண்ணியமிகு உலமாப் பெருமக்களால், ஷாதலியா தரீக்காவின் திக்ரு மஜ்லிஸும் நடத்தப்பட்டது.

பின்பு சித்தார் கோட்டை,தெக்குவாடி,முன்னால் மதரஸா 
மதீனத்துல் உலூம் முதல்வர், ஆலிம் கவிஞர்.மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.ஹாஜா முஹ்யித்தீன் காதிரி ஆலிம் B.A.ஹஜ்ரத் 
அவர்கள் சிறப்பு பயான்  செய்து, இறுதியில் சிறப்பு துஆச் செய்தார்கள்.


நிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேச உணவுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் முக்கியஸ்தர்களான,ஜனாப் முஹம்மது ராஜிக் கனீமி,ஹாஜி முஸ்தஃபா ஆசிரியர்,மற்றும் சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் துணை முதல்வர்,மௌலானா மௌலவி அஃப்ஜலுல் உலமா சைய்யிது அபூதாஹீர் அரூஸீ ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத், ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களும்,உஸ்தாதுமார்களும்,உள்ளூர் மற்றும் வெளியூரை ச் சார்ந்த ஏராளமான பொது மக்களும்,கலந்து கொண்டு,'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் துஆவையும்,வல்ல நாயனின் அன்பையும்,அருளையும் 
பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு