Posts

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

Image
இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம் وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3) 1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3) இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி) படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும் ويذكروا اسم الله في أيام

மப்ரூரான ஹஜ்ஜு !!!!

Image
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ ஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197] இது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.                                                      இப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ மப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்விர

ஹஜ்ஜு அவசரம் !!!

Image
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97] ஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது. ஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வரு

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு