Posts

Image
பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!! மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி  ( ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி  ( ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும் . எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும் . புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா , உத்தம நபியின் உதய தின விழா , மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும் .  கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி  ( ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ , விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது. மீலாது விழாக்களில்  அனாச்சாரம் ,   ஆடம்பரம் , கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது . மனித சமுதாயத்தின் உயர்வுக்கும் , அன்பு

தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு

Image
மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது. அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம்.  மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, 'மஸ்தான்'

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு

Image
எந்த ஒரு தத்துவத்தையும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பது,அதை இழிவுபடுத்துவதாகாது.மாறாக,ஆதாரத்தின் அடிப்படையில்,ஒரு கொள்கை ஆராயப்படுவது ஆரோக்கியமான ஒன்றேயாகும்.ஆனால் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை அவமதித்து,இழிவுபடுத்துவது,ஒரு சமூகத்தால் கடவுளாக கொண்டாடப்படுபவற்றை வசவுபாடி இழிவுபடுத்துவது ஏற்புடையதன்று. '' ( நம்பிக்கையாளர்களே! ) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என)அழைக்கின்றார்களோ,அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.அதனால் அவர்கள்,அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள்.'' அல் குர்ஆன் ;-- ( 6 ;108 ) '' பெற்றோரை திட்டுவது பெரும்பாவங்களில் ஒன்று '' என பெருமானார் நபி (ஸல்) அவர்கள் நவின்றபோது, ஒரு மனிதன் தனது பெற்றோரையுமா திட்டுவான்? '' என நபித்தோழர்கள் வியப்போடு வினவினார்கள்.'' அடுத்த மனிதரின் பெற்றோரை திட்டும்பொழுது அவன் பதிலுக்கு இவனுடைய பெற்றோரை திட்டுவானல்லவா?'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்கள். ( புகாரி ; 5973, முஸ்லிம் ; 90 ) எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்களைப் பற்றி சிந்திக்

வலிகள் வந்தாலே பிரசவம்!

Image
' 'அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி வருவதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படி செய்தோம் '' அல்குர்ஆன் 32 ; 21 நீ, திருந்தி அவனிடம்  திரும்பி  வரவேண்டும் என்பதற்காகத்தான் அவன் உனக்கு சிறிய வேதனையைத் தருகின்றான். சந்தோஷங்கள் உன்னை இறைவனை விட்டும் தூரமாக்கும் போது கவலைகள் தாம் உன்னைக்கட்டிப்போட்டு அவனிடம் கொண்டு போய்ச்சேர்க்கின்றது. மௌலானா ரூமி கூறுவார்கள் ; தாய்மார்களுக்குப் பிரசவ வேதனை ஏற்படாதவரை குழந்தை பிறப்பதற்கு  வேறு வழி எதுவும் கிடையாது.அதாவது வேதனை மிகவும் முக்கியமானது.ஞானமெனும் அமானிதம் உள்ளத்தில் இருக்கின்றது. உயிரோ அதை கருவுற்றுள்ளது. மற்றபடி இந்த அறிவுரைகளெல்லாம் அமானிதத்தை வெளிக்கொணர்வதற்கு தாதியைப் போன்றது.தாதியானவள் கூறுகிறாள் ; பெண்ணுக்கு இன்னும் பிரசவ வேதனை ஏற்படவில்லை.அந்த வேதனை ஏற்ப்பட்டால் தான் குழந்தை பிறப்பதற்கு வழி உண்டாகும்.அதாவது அறிவுரைகள் பயன்தரவில்லை என்றால் நன்மையின் செயல்பாடுகள் எதுவும் நடைபெறாது.  '' மஸ்னவி ஷரிஃபு. உனக்கு வலி வந்தாலே உன்னிடம்

சால்னாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டுக்கும் வழங்கிடுவீர்!

Image
நபித்தோழர் அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.எனக்கு எனது நேசர் நபி (ஸல்) அவர்கள் மூன்று உபதேசம் செய்தார்கள். (1) தலைமையின் சொல் கேளு,கட்டுப்படு, அந்த சொல் மூக்கு அறுபட்ட அடிமைக்குரியதாக இருப்பினும்சரி, (2) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து,பின்னர் உனது அண்டை வீட்டுக்காரர்களைப்பார்த்து அவர்களுக்கு அதிலிருந்து கொடுத்து விடு. (3) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு (நூல் --- முஸ்லிம்) இனியசகோதரா! இம்மூன்று உபதேசத்தை நீயும் செயல்படுத்து, முதலாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது,தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பிலுள்ளவர் என்று பொருள்.எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித் தலைவர்,குடும்பத்தலைவர், நீசார்ந்த அமைப்பின் தலைவர்,பணிசெய்யும் நிறுவனத்தலைவர்,இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதன் மூலம் '' நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,அவனது தூதருக்கும்,உங்களில் அதிகாரமுள்ளவருக்கும் வழிப்படுங்கள்'' (4;50) என்ற இறைவாக்கை காப்பாற்றுங்கள்.புகாரி (7144) முஸ்லிமுடைய அறிவிப்பில் '' விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலைமையின் சொ

ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!

Image
ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன். அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து  தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251) அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு

ஹிஜ்ரி சகாப்தம் 1434 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Image
'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913  முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய  அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் வரலாறு

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன் !! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!! ரப்பனா ஆத்தினா ஸஆதத் தாரைன்.  அன்புடையீர்! அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரஸாவை பற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் .அல்ஹம்துலில்லாஹ். மதரஸா  ஜாமிஆ மன்பவுல் அன்வார்:   தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம் லால்பேட்டையில் அமைந்துள்ளது. மதரஸா ஜாமிஆ மன்பவுல் அன்வார். இது தமிழ்நாட்டில் வேலூர் மதரஸா அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மதரஸாவாகும். இம் மதரஸா  1862ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரஸாவில் ஒவ்வொரு வருடமும் இருநூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம் தோறும் 50மேற்பட்டோர் ஃபாஜில், மௌலவி மற்றும் ஹாபிழ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.   பட்ட

M.I.S. CERTIFICATE COURSE மர்கஸுல் அல் இஸ்லாஹ் வழங்கும் ஒரு வருட ( Master in Islamic Studies) படிப்பு

Image
உலமாக்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு! இமாம்களுக்கு கிறாஅத் -- பயான்களில் சிறப்புப்பயிற்சிகள் மிக குறுகிய காலத்தில் குர்ஆன், தீனிய்யாத்தைகற்ப்பிக்கும் வழிகாட்டல் மற்றும் ஜமாஅத்தார்களுக்கு ஆற்றிட வேண்டிய மார்க்க தொடர்பிலான அனைத்து சேவைகளுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டல் பயிற்றுவிப்புகள். கம்யூட்டரை இயக்கிட  தேவையான பயிற்சிகளும்,கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தப்ஸீர், ஹதீஸ்,ஃபிக்ஹ்,தஸவ்வுஃ,தாரீக் ஆகியவற்றிலிருந்து தீன் கித்மத்திற்கு அவசியமானவற்றை புதிய பாணியில் பயிற்றுவித்து சிறந்த முறையில் மார்க்க சேவைகளை ஆற்றிடும் வழிகாட்டல்கள். மூத்த உலமாக்கள்,இஸ்லாமிய (Professors) பேராசிரியர்கள்,ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் நுணுக்கமான மார்க்க தகவல்கள், வாழ்வியல் வழிகாட்டல்களை அறிந்துகொள்ள விசேஷ வகுப்புகள். சிறுபான்மையோருக்கான அரசாங்க ஒதுக்கீட்டிலிருந்து வசதியற்ற  வயோதிகர்கள் -- விதவைகள் -- கல்வி -- திருமணம் ஆகியவற்றுக்கான உதவிகளை பெற்றுத்தரும் வழிமுறை பற்றிய வழிகாட்டல்கள். கம்யூட்டர் தொழில் சார்ந்த பயிற்றுவிப்புகள் மூலம் Typewriting, Microsoft -- D

புனித ஷெய்கு மார்களின் முக்கியமான நினைவு தினங்கள் (மறைவு நாட்கள்)

Image
1. முஹர்ரம் பிறை 9,10 -- தாஸூஆ ஆஸூரா நோன்பு தினங்கள் பிறை 10 -- ஆஸூரா தினம் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள்  ஷஹீதான தினம். 2. ஸஃபர் பிறை 5 -- ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) பிறை 13 -- ஷைகு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (ரலி) பிறை 14 -- ஷைகு (காயல்பட்டினம்) தைக்கா ஸாஹிப் காஹிரீ (ரலி) கடைசி புதன் (ஒடுக்கத்துப் புதன்) 3. ரபீஉல் அவ்வல் பிறை 12 -- ஈருலக இரட்சகர் நாயகம் ரஸூல் (ஸல்)  அவர்களின் ஜனன தினம். 4. ரபீஉல் ஆகிர் பிறை 11, (பிறை 18) -- ஃகவ்துல் அஃலம் முஹ்யித்தீன்  அப்துல் காதிர் ஜீலானி (ரலி) பிறை 26 -- பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி) 5. ஜமாதுல் அவ்வல் பிறை 2 -- பெரிய ஷைகு நாயகம் அவர்களின் மனைவியார்  மர்யம் ஆயிஷா (ரலி) பிறை 10 -- முத்துப்பேட்டை ஷைகு தாவூது வலீ (ரலி) 6. ஜமாதுல் ஆகிர் பிறை 10 -- நாகூர் ஷாஹுல் ஹமீது  பாதுஷா நாயகம் (ரலி) பிறை 14 -- இமாம் கஸ்ஸாலி (ரலி) 7. ரஜப் பிறை 5 -- இமாமுல் அரூஸ் மாப்பிள

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது . மன நிம்மதி நிறைகிறது . உறவுகள் ஒன்று கூடுகிறது . ஏழைகள் பசியாறுகிறார்கள் . பள்ளி ,  மத்ரஸாக்கள் பயனடைகிறது . இறையருல் இறங்குகிறது . தியாக உணர்வு உயர்கிறது . ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது . கூட்டுறவு மேம்படுகிறது . வறியவர்கள் வளம் பெறுகிறார்கள் . அனாதைகள் பலம் பெறுகிறார்கள் . முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே   அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்  கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்   பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளையினர்களும்,தி யாகத்  திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து  துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottaisunnathjamath.blogspot.com

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு