அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, August 6, 2011

மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டிஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக
53-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011)  முதல்
(23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து
முடிந்தது. இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன

உலகத்திலேயே தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டிமலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆண்களில், மலேசியாவைச் சேர்ந்த காரீ,முதலிடத்தையும்,
பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,
ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது  இடத்தையும்,
புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக்
கொண்டார்கள்

பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா
முதலிடத்தையும், இந்தோனேசியாவைச் சார்ந்த  காரீயா
இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூரைச் சார்ந்த காரீயா
மூன்றாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா
நான்காவது இடத்தையும், பிலிப்பைன்ஸை சார்ந்த காரீயா
ஐந்தாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர்

இதில் பலநாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள்.மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..

வெளியீடு-
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப்பேரவை வாழூர் கிளை.


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு