அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Wednesday, June 6, 2012

வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு சென்னை, சைதாப்பேட்டை நவாப் ஸஆதத்துல்லாஹ் கான் பள்ளிவாசல் வளாகத்தில், ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் மாலை 5-மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.மௌலானா மௌலவி முஹம்மது ஹனீஃப் பாக்கவி ஹழ்ரத் மற்றும் நவாப் பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி,முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் அய்யூப் அஜ்ஹரீ ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.P.அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர்,மௌலானா மௌலவி முஹம்மது முக்தார் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், தராவீஹ் தொழுகையும்,தஸ்பீஹுகளும் என்ற தலைப்பிலும்,மேலப்பாளையம்,உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.காஜா முயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்,மீலாதும் மவ்லீதும் என்ற தலைப்பிலும்,பெங்களூர் தாருல் உலூம் ஷபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் S.ஷைஃபுத்தீன் ரஷாதி ஹழ்ரத் அவர்கள்,கூட்டு துஆக்கள் நன்மையே என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.கேரள மாநிலம் ஸஹாபாத்துஸ் சுன்னியாவின் நிறுவனருமான,அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ், அபுல் அய்தாம்,கமருல், உலமா,ஷைய்குனா,அல்லாமா,காந்தபுரம் A.P. அபூபக்கர் அஹ்மது முஸ்லியார் பாக்கவி ஹழ்ரத் கிப்லா அவர்கள்,இறுதி நபித்துவமும் காதியானிஸமும் என்ற தலைப்பில் சிறபுப்பேருரையாற்றினார்கள்.மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது இபுராஹீம் கலீல் புஹாரி தங்கள் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், நிறைவு சிறப்பு துஆ ஓதினார்கள்.இச்சிறப்புமிகு மாபெரும் ஷரீஅத் மாநாட்டினை அகில இந்திய பாக்கவிகள் அசோசியேஷன் மற்றும் லஜ்னத்துல் இர்ஷாத் பாக்கவிகள் சங்கம் (லிபாஸ்) மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளை

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு