அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, June 17, 2012

புனிதமிகு மிஃராஜ் இரவு


முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1433 ரஜப் பிறை 27 (16-06-2012)சனிக்கிழமை பின்னேரம்,ஞாயிற்றுக்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்,மரியாதைக்குரியமௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத் அவர்கள்நபி (ஸல்அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களேஅதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும்மிகத் தெளிவாகவும்,மலேசியாவில் அதிகமான இடங்களில் பயான் செய்தார்கள்இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும்இலங்கைவளைகுடாநாடுகள்,மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமான நல்லடியார்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும் பெற்றுக்கொண்டார்கள்வஸ்ஸலாம்.ஆமீன்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு