ரஜப் பிறை 13-முதல் ஷஅபான் பிறை 2-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்





சமுதாய பெருந்தலைவருமான,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117--வது பிறந்த  நாள் ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8-30 மணிக்கு சென்னை வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா, மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.ஜியாரத் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாபநாசத்தில்  நடைபெற்ற வெள்ளம் ஜீ அவர்களின் இல்லத் திருமண விழாவில், காயல் பட்டினம் முஅஸ்கரியா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி  ஹஜ்ரத் அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.வழுத்தூர் முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ்ஷா ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்கள் முனீருல் மில்லத் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர்,பேராசிரியர்,டாக்டர் சே.மு.மு. முஹம்மது அலி ஆகியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்செய்து சிறப்புறையாற்றினார்கள்.

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்,கடையநல்லூர் பெரிய தெரு நெய்னா முஹம்மது பெரிய குத்பா பள்ளிவாசலில் ஜூன் 6-ஆம் தேதி அன்று காலை 10-மணியளவில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா மௌலவி டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.புனித ரமலான் பிறை சம்பந்தமாகவும்,நோன்பு பெருநாள்,ஸதகத்துல் ஃபித்ர் சம்பந்தமாகவும்,மார்க்க பற்று குறைவும்,ஒழுக்கமின்மையும்,ஏற்ப்பட்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடத்தில்,ஷரீஅத்தின் விழிப்புணர்வு  ஏற்ப்படுத்துவது சம்பந்தமாகவும்,சஹர் சிந்தனை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும்,ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்தில் மாவட்டம்  முழுவதும் உள்ள ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்துகொண்டார்கள்.

கடையநல்லூர் ஸ்மார்ட் ஹாலிடே சிட்டி நகரில் புதிய பள்ளிவாசல் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,மௌலானா மௌலவி டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தலைமையேற்று அடிக்கல் நாட்டினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட அரசு டவுன் காஜி ஏ.ஒய்.முஹியித்தீன் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானியா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.எச்.ஷம்ஸுத்தீன் ஹஜ்ரத் சிறப்புறையாற்றினார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி,கிருஷ்ணாம் பேட்டை மஹல்லாவில் உலமாயே--நூரிய்யா சார்பில்,இம்மஹல்லாவைச் சேர்ந்த 2012-ஆம் ஆண்டு பட்டம் பெறும் ஆலிம்களுக்கு வரவேற்பு விழா,ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜிதில் நடைபெற்றது.மௌலவி முஹம்மது இத்ரீஸ் பிலாலி கிராஅத் ஓதினார்கள்.சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளரும்,சென்னை பல்கலைக் கழகத்தின் அரபித்துறை பேராசிரியருமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் வி.எஸ்.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.சென்னை நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் அல்லாமா மௌலானா பிலாலிஷாஹ்  ஜுஹூரி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.

சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரியில் சைய்யிதுனா கௌதுல் அஃலம் (ரலி) அவர்களின் 17- வது திருப்பேரரும்,கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் 27-வது திருப்பேரருமான, மௌலானா அஷ்ஷைஹ் சைய்யிது ஹாஷிமுத்தீன் அல்பக்தாதி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சி ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்றது.ஜமாலிய்யா அரபுக்கல்லூரி மாணவர் மஹ்பூபுர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் ஜமாலி கிராஅத் ஓதினார்கள்.ஜமாலிய்யாவின் பேராசிரியர்,மௌலானா மௌலவி எம்.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.சைய்யிதுனா கௌதுல் அஃலம் (ரலி) அவர்களின் திருப்பேரர் மௌலானா அஷ்ஷைஹ் சைய்யிது ஹாஷிமுத்தீன் அல்பக்தாதி ஹஜ்ரத் அவர்கள் அரபியில் சிறப்புரையாற்றினார்கள்.இதன் உருது மொழியாக்கத்தை,ஜமாலிய்யாவின் முதல்வர் மௌலானா மௌலவி டி.செய்யிது நியாஸ் அஹ்மதுஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்களும்,தமிழ் மொழியாக்கத்தை சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும்,சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான,மௌலானா வி.எஸ்.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் ஆகியோர் செய்தார்கள்.ஏராளமான பொதுமக்களும்,நூற்றுக்கணக்கான உலமாப்பெருமக்களும் கலந்துகொண்டார்கள்

.தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அஞ்சுமன் ஃபாத்திமா பத்ர் பள்ளிவாசலில் புனித மிஃராஜ் இரவை முன்னிட்டு,சிறப்பு பயான் ஞாயிறு திங்கள் இரவு நடைபெற்றது.அய்யம் பேட்டை சுபுலுஸ்ஸலாம் முதல்வர்,மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் அஹ்மது ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் தொடக்கவுரையுடன் தொடங்கியது.தேனி மாவட்டம் வைகை அணை ஜாமிஆ அஸரத்துல் முபஸ்ஸராவின் முதல்வர்,எம்.எம்.முஹம்மது ஹுஸைன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மிஃராஜூன் நபி சிறப்புகள் என்ற தலைப்பில்,சிறப்பு சொற்ப்பொழிவு ஆற்றினார்கள். மௌலானா ஏ.அப்துல் மாலிக் ஆலிம்,மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் துஆ ஓதினார்கள்.சிறப்பு பயானுக்குப் பிறகு ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது.

வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு