நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் அரபுக் கல்லூரிகள் துவங்கியது!!!



முதஅவ்விதன்!முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!
  
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த  ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம்ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, நரகவாதிகளின் குழப்பங்கள் அனாச்சாரங்கள்,தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில் உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அல்லது ஏழு ஆண்டுகள்,அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,
மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ்  பெருமானாரின்  ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக்  கல்வியுடன்  மார்க்க  கல்வியை  வழங்கிய
உயர்ந்த பெற்றோர்களாக  வல்ல அல்லாஹ் ஆக்குவானாகஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக்கல்லூரிகள்; ஷவ்வால்பிறை 15-ல்  துவங்க  இருக்கிறது  பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குநல் உதவி  செய்வானகவும்  ஆமீன்.. வஸ்ஸலாம்.
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க  வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு