ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும் - மூன்றாம் பாகம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً

அல்லாஹ் எந்த வியாதியையும் இறக்க வில்லை.அதற்கு நிவார ணத்தையும் இறக்கியே தவிர. [நபிமொழி, புகாரி ;5678]


عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلَا تَدَاوَوْا بِحَرَامٍ

எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.ஆகவே மருந்திடுங்கள்.ஹராமை – விலக்கப்பட்டதைக் கொண்டு மருந்திடாதீர். [நபிமொழி,அபூதாவூது]


عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً عَلِمَهُ مَنْ عَلِمَهُ وَجَهِلَهُ مَنْ جَهِلَهُ.اخرجه النسائ وابن ماجه وصححه ابن حبان والحاكم

எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.அதை அறிந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டனர்.தெரியாதவர்கள் தெரியாமலிருக்கிறார்கள்.  [நபிமொழி,அஹ்மது,நஸயி,இப்னு மாஜா]

நோயை இறக்கியவன் மருந்தையும் இறக்காமலில்லை.எந்த நோயுக்கும் மருந்து இல்லாமல் இல்லை.அதை தெரியாமல் இருக்கலாம்.இன்னும் சில நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் மருந்து இல்லாமல் இல்லை.

எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது. - மரணத்தைத் தவிர,- முதுமையைத் தவிர.  [அஹ்மது]                      
- முட்டாள் தனத்தைத் தவிர [சமஹ்ஷரி]

انما شفاء العى السؤال

அறியாமை நோயுக்கு நிவாரணம் [அதை அறிந்து கொள்ள]கேள்வி கேட்பதாகும். [மிஷ்காத் ; 531,அபூதாவூது ; 336,சுனனுல் குப்ரா]

தனக்கு தெரிய வில்லை என்றே  [நோய் இருப்பதே தெரியாதவன்] தெரிந்தும் சிகிச்சை செய்யாதவன் அல்லது வைத்தியனைப் பெற்றுக் கொள்ளாதவன் நிவாரணம் பெற்று குணமாக வாய்ப்பே இல்லை.

மருந்தை அல்லாஹ் இறக்கினான் என்றால் அவன் அதை அறிவித்தான் அல்லது அதை இவ்வுலகில் ஏற்படுத்தினான் என்று பொருள்.சில நோய் களுக்கு நபிமார்கள் – தீர்க்கதரிசிகள் வாயிலாக அறிவித்தான்.அதிக மான நோய்களுக்கு அனுபவத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை ஆராய்ச்சியின் மூலம் மனித சமுதாயத்திற்கு அறிவித்துக் கொடுத்தான்.

மருத்துவ சாஸ்திரத்திற்கான சூத்திரங்கள் மூன்று.
1, தொடர்ந்து ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதை பராமரிப்பது.
2, உடலுக்கு தீங்கு,பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது.
3, நோய்க்கிருமிகள் மற்றும் அதற்கான காரணிகளை கண்டறிந்து களைவது.

இந்த மூன்று மூலவிதிகளையும் திருமறை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

முதல் விதியை فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ   “உங்களில் யாராகினும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத் திலோ இருந்தால் [அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை அதை] மற்ற நாட்களில் கணக்கி [ட்டு நோற்றுவி] டவும்” [அல்குர்ஆன் : 2; 184] என்பதிலிருந்து பெறப்படுகிறது.

அதாவது பயணம் என்பது அசௌகரீகங்கள் சம்பவிக்க வாய்ப்புள்ள ஒரு தளம்.அது உடல் நிலையை தலைகீழாக புரட்டிப் போடக் கூடியது.நோன்பு நோற்றால் உடல் நிலை இன்னும் அதிகமாக மோசமடையலாம் என்பதால் உடல் நிலையைப் பாதுகாக்க அதன் நலத்தை பராமரிக்க நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறே நோயாளி நோன்பு நோற்றால் நோய் இன்னும் அதிகரித்து நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க இருக்கிற உடல் நிலையை தொடர்ந்து பராமரிக்க நோன்பை விடுவதற்கு அவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இவ்வசனம் சொல்லும் செய்தி இதுதான் ; உடல் நிலையை சீராக வைத்துக் கொள்வதோடு அதை அப்படியே பராமரிக்க வேண்டும். இருக்கும் நிலைமை சீர்கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இது தான் முதல் சூத்திரம்.

இரண்டாவது சூத்திரம் தற்காப்பு.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ள வேண்டாம்.[அல்குர்ஆன் :4 ; 29]என்ற திருமறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.

அதாவது உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை மேற்கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டாம். குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று பயந்தால் தண்ணீர் கொண்டு ஒழு செய்யவோ குளிக்கவோ வேண்டாம்.தயம்மும் செய்து கொள்ளலாம் என்ற சட்ட அனுமதியை இந்த வசனத்திலிருந்து இமாம்கள் ஆய்வு செய்து எடுத்துள்ளனர். அப்படியானால் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை விட்டும் உடலை தற்காத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இரண்டாவது சூத்திரம்.

மூன்றாவது சூத்திரம், அல்குர்ஆனின் [2 ; 196]வசனத்திலிருந்து பெறப்படுகிறது.அதாவது ஹஜ்ஜி உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர் அதிலிருந்து விடுபடுவதற்கு முன்பு தலை முடியை சிரைக்கக் கூடாது.ஆனால் அவர் தலையில் [பேன்,புண்,வலி ஆகியவைகளால்] இடையூறுள்ளவராக இருந்தால் முடியிறக்கிக் கொள்ளலாம்.பிறகு அதற்காக பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று மேற்படி வசனம் தெளிவாகப் பேசுகிறது. நோய்க்காரணிகளை நீக்க வேண்டும் என்ற உடல் நலத்திற்கான மூன்றாவது விதியை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது எனலாம்.

நோய் கண்டவர்கள் நோய் விலக முயற்சி செய்ய வேண்டும்.இது மூன்று வகை.

முதலாவது ; மருத்துவம் பார்ப்பது.வைத்தியம் செய்வது. இரண்டாவது ; ஓதிப்பார்ப்பது.
மூன்றாவது ; துஆ செய்வது.

இம்மூன்று முறைகளும் ஆரோக்கியமான வழிமுறைகளே. இதில் எதுவும் தடை செய்யப்பட்டதல்ல.மூன்று வழிமுறைகளையும் ஒரு சேர மேற்கொள்வது மேலானதாகும்.இப்படி வைத்தியம் பார்ப்பதில் நல்ல குணம் கிடைக்கும்.இதில் எதுவும் இறை நம்பிக்கைக்கு எதிரானதோ களா கத்ர் – இறைவிதி விசுவாசத்திற்கு முரணானதோ அல்ல.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمَا أَيُّكُمَا أَطَبُّ فَقَالَا أَوَ فِي الطِّبِّ خَيْرٌ يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَ زَيْدٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنْزَلَ الدَّوَاءَ الَّذِي أَنْزَلَ الْأَدْوَاءَ

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் தங்களது முஅத்தாவில் பதிவு செய்தி ருக்கும் ஒரு ஹதீஸில் ; நபி [ஸல்] அவர்கள் இரண்டு மனிதர்களிடம் உங்களில் கைதேர்ந்த மருத்துவர் யார்?எனக்கேட்க அதற்கு அவ்விருவரும் ; அல்லாஹ்வின் தூதர் அவர்களே [இஸ்லாமிய பார்வையில்] மருத்துவத்தில் [குணம் கிட்டி] பலன் கிடைக்குமா ?[அதை செய்யலாமா ?] எனக் கேட்டனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் அருளினார்கள் ; “நோயை இறக்கி வைத்த வனே மருந்தையும் இறக்கி வைத்தான்” என்றுரைத்தார்கள்.அதாவது மருத்துவம் பார்ப்பதும் இறை ஏற்பாடு தான்.இஸ்லாத்தில் ஏற்புடையதுதான் என்று தெளிவுபடுத்தினார்கள்.


 عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ قَالَ
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ

ஒரு நபித்தோழர், நபி [ஸல்] அவர்களிடம் வந்து,மருத்துவம் பார்க்கலாமா ? ஓதிப்பார்த்து மந்திரிக்கலாமா ? அது இறைவனுடைய விதிக்கு – களா கத்ருக்கு – இறை ஏற்பாட்டுக்கு மறுப்பானதா ? இறை விதியில் எதையாவாது அது மாற்றுமா ? என வினவியபோது, அதுவும் [மருத்துவம் பார்ப்பதும்,ஓதிப்பார்ப்பதும்] இறைவிதி – ஏற்பாட்டில் உள்ளது தான் என்று பதிலளித்தார்கள். [திர்மிதி]

ஆக மருந்தைக் கொண்டு குணம் கிடைப்பது என்பது சாப்பிடுவதைக் கொண்டு பசி அடங்குவது போல.குடிப்பது கொண்டு தாகம் தீருவது போல.பெரும்பாலும் பலன் கிடைக்கும்.சில சமயம் இறை நாட்டப்படி நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமலும்,மருந்து வேலை செய்யாமலும், நிவாரணம் கிடைக்காமலும் போகலாம்.

பொதுவாக நோயுக்கு மருத்துவ சிகிச்சை செய்வது,ஓதிப்பார்ப்பது, துஆச்செய்வது இம்மூன்றுமே நபி [ஸல்] அவர்களின் நடையும் வழிமுறையும் தான்.நாயகம் [ஸல்] அவர்கள் தங்களுக்கே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்களிடம், உங்களுக்கு மருத்துவ ஞானம் எங்கிருந்து கிடைத்தது ? மருத்துவக் கல்வியை யாரிடமிருந்து கற்றீர்கள் ? இவ்வளவு மருத்துவக் குறிப்புகள் கூறுகிறீர்களே என்று அவர்களது சகோதரி மகன் உர்வா [ரலி] அவர்கள் வியந்த போது ஹாய் உர்வா! என தோளைத் தட்டி சந்தோஷப்பட்டு சொன்னார்கள் ;  மருத்துவக் குறிப்புகளை நபி [ஸல்] அவர்களிடமிருந்து பெற்றேன்.
இதல்லாமல் நபி [ஸல்] அவர்களுக்கு கடைசி காலத்தில் மருத்துவர் களின் ஆலோசனையின் படி செய்ய வேண்டிய எல்லா மருத்துவத் தையும் சொன்னபடி சொன்ன நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொடுத்து நர்ஸாக இருந்து நானே கவனித்தேன் என்று பெருமிதத் துடன் கூறினார்கள். இந்த செய்தி முஸ்னது அஹ்மதில் பதிவாகி யுள்ளது.

இதன் படி நாயகம் [ஸல்] அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யப் பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.இதல்லாமல் இறைத்தூதர் நபி [ஸல்] அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓதிப்பார்ப்பதோடு மற்றவர் களையும் ஓதிப்பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ

நபி [ஸல்] அவர்கள் படுக்கைக்குச் சென்றால் தங்களது இரண்டு கரங்களை [துஆ ஓதுவதைப் போல] ஒன்று சேர்த்துஅதில் குல்ஹுவல்லாஹு அத்தியாயம் [112] மற்றும் குல் அவூது பிரப்பில் ஃபலக்,குல்அவூது பிரப்பின்னாஸ் [113,114] ஓதி அவ்விரண்டு கையிலும் ஊதுவார்கள்.பிறகு அவ்விரண்டு கையைக் கொண்டு உடம்பில் முடிந்தளவு எல்லாப் பகுதியிலும் தடவுவார்கள்.தலை முகத்திலிருந்து ஆரம்பித்து உடலின் முன்பாக முழுவதும் தடவுவார்கள்.இப்படி மூன்று முறை செய்வார்கள். [புகாரி ; 5017]


عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا. 
   
அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் ;   அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையென்றால் தங்களின் மீது தாங்களே [குர்ஆனின்]பாதுகாப்பு அத்தியாயங்களை [113, 114] ஓதி ஊதிக் கொள்வார்கள்.அவர்கள் ரொம்ப முடியாமல் போன போது நான் அவர்கள் மீது ஓதிப் பார்த்தேன்.அவர்களின் புனிதமான கையில் ஓதி அந்தக்கையால் அதன் பரக்கத்தை நம்பி அவர்களைத் தடவினேன். [புகாரி ; 5016, முஸ்லிம் ; 2192]


عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ  قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ « تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ »

நபித்தோழர்கள் ஒரு முறை நபி [ஸல்] அவர்களிடம், நோயுக்கு நாங்கள் மருந்தெடுத்துக் கொள்ளலாமா ? எனக்கேட்ட போது இறையடியார்களே! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருத்துவ நிவாரணம்,இன்னொரு அறிவிப்பில் அதற்குரிய மருந்தில்லாமல் ஏற்படுத்த வில்லை.முதுமையைத் தவிர.[அபூதாவூது ; 3855]
இந்த நபிமொழி மருந்தெடுப்பது அப்திய்யத் - இறையடிமைத்துவம், தவக்குல் - இறைவனிடம் பொறுப்பு ஒப்படைப்பது,ஈமான் - இறை நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.


عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ ».


எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.வியாதியை மருந்து அடைகிற போது இறை நாட்டப்படி அது குணமாகும். [முஸ்லிம் ; 2204]


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.


சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு