அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Thursday, January 15, 2015

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்புடையீர்! 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், ஹிஜ்ரி 1436 ரபீஉல் அவ்வல் பிறை 19 (09-01-2015) வெள்ளிக்கிழமை மதியம் 2-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா 
ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்,
முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் 
மாணவர்கள் இன்னும் வெளியூர் உலமாப் பெருமக்கள்,
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புனிதம் 
வாய்ந்த மௌலிது ஷரீஃப், ஓதினார்கள்.


இந்நிகழ்ச்சிக்கு வேதாளை ,மௌலானா மௌலவி நூரிஷா தரீக்காவின் ஹலீஃபா,அஷ்ஷைகு அப்துல் கனீ மன்பயீ  ஹஜ்ரத்  அவர்கள்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துஆச் செய்தார்கள். 


இந்நிகழ்ச்சியில் உள்ளூர்,மற்றும் வெளியூர் பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,இறைநேச செல்வர்களின் அன்பையும்,பெற்றுக் கொண்டார்கள்.அனைவருக்கும் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு