இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய அலுவலகத் திறப்பு விழா !!!


முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின், 
புதிய அலுவலகத் திறப்பு விழா ரபீவுல் அவ்வல் பிறை 
09 ( 01-01-2015 ) வியாழக் கிழமை அன்று அல்லாஹ்வின் 
மாபெரும் பேரருளால் திறப்பு விழா கண்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விழாவிற்கு கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா 
அரபுக் கல்லூரியின் அரங்காவலர்,மற்றும் 
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவத் தலைவருமான,அல்லாமா அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு 
டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A(Hons),M.A..,Ph.D.
அவர்கள் தலைமை தாங்கி,அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். 




இராமநாதபுரம் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளின்  தலைவர்கள்.நிர்வாகிகள் மற்றும் ஏழு வட்டார 
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்கள்,
செயலாளர்கள் & பொருளாலர்கள் ஆகியோர்கள் 
முன்னிலை வகித்தார்கள்.


இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் 
தலைவர் மௌலானா அல்ஹாஜ் A.வலியுல்லாஹ் 
ஹஜ்ரத் நூரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலானா அல்ஹாஜ் M.அப்துற் ரஹ்மான் மிஸ்பாஹி 
ஹஜ்ரத் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 
A.அன்வர் ராஜா Mp அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர், மற்றும் மதுரை ஜாமிஆ நாஃபிவுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா அல்ஹாஜ் M.முஹம்மது காசிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,மற்றும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர், மற்றும் காரைக்குடி ஜாமிஆ பத்ஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா அல்ஹாஜ் A.முஹம்மது ரிழா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் 
ஆகியோர் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.

இவ்விழாவில் மாவட்டதின் பல பகுதிகளிலிருந்தும் 
ஏராளமான உலமாப் பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர். 
அல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாம்.

வெளியீடு  -- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு