Posts

Showing posts with the label எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்

ஹிஜ்ரி சகாப்தம் 1438 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

Image
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண

ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்? ஹாஜிகள் இனிமேல் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?

Image
10-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;- தலைப்பு ;-  ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.கிப்லா அவர்கள் தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!

Image
ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது. எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவ

பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்?

Image
05-10-2014 ஞாயிற்றுக்கிழமை  ஹஜ்ஜுப் பெருநாள்  சிறப்புப்பேருரை  . தலைப்பு ;-   பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்? மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

அறியவேண்டிய அரஃபா நாள் !!!

Image
عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال :  «أفضلُ الأيام يومُ عرفة நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும்.  (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் ) இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும். سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ  « صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة » அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425) அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765) அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766) இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்ல

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

Image
இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம் وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3) 1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3) இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி) படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும் ويذكروا اسم الله في أيام

மப்ரூரான ஹஜ்ஜு !!!!

Image
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ ஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197] இது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.                                                      இப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ மப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்விர

ஹஜ்ஜு அவசரம் !!!

Image
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97] ஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது. ஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வரு

யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!!

Image
12-09-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!!  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள் !!!

Image
நேன்பில் புடம் போடப்படும் ஈமான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......! உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில்,  உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  நோன்பு ஓரு அதிசயம் பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....! சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….! ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது. உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது. “இறைநம்பிக்கையாளர்களே......!  உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1 நோன்பு உடலையும் உள்ளத

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு