அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Monday, September 12, 2016

புனித ஹஜ் ஓர் ஆய்வு !!!


ஹஜ் என்றால் என்ன? 

இது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். மக்கா சென்று 

வர பொருள் வசதியும், உடல் சக்தியும் உள்ளவர்கள் 

வாழ்க்கையில் ஒரு தடவை புனித மக்கா சென்று 

ஹஜ்ஜை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும். 

ஹஜ் யார் மீது கடமை?

1. முஸ்லிமா இருத்தல்.

2. பருவமடைந்திருத்தல்.

3. சித்த சுவாதீனமாயிருத்தல்.

4. சுதந்திரமாயிருத்தல்.

5. வழியில் அச்சம் அற்றவனாக இருத்தல்.

6. ஒரு பெண்ணுக்கு தகுந்த துணை இருத்தல் வேண்டும்.

7. சரீர சுகத்துடன் இருத்தல்.

8. போய் சேருவதற்கு தகுந்த காலம் இருத்தல்.


ஹஜ்ஜின் பர்ளுகள் என்ன?

1. இஹ்ராம் கட்டுதல்.

2. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் இரவு சிறிது 

நேரம் முஜ்தலிபாவில் தங்குதல்.

3. தவாபு செய்தல்.

4. ஷபா, மர்வா என்ற இடங்களுக்கு தொங்கோட்டம் ஓடுதல்.

5. ஆண்கள் தலையின் முடியின் மூன்றுக்கு குறையாமல் 
சிரைத்து கொள்ளுதல், பெண்கள் கட்டையாக்கி கொள்ளுதல்.

6. மேற்கூறப்பட்ட பர்ளுகளை ஒழுங்கு முறையாய் நிறைவேற்றுதல். 


இஹ்ராம் கட்டியவர் செய்யக்கூடாதவை என்ன?

1. உடலுறவு கொள்ளுதல்.

2. தாடிமயிர், தலைமயிர் ஆகியவற்றில் என்னை தேய்தல்.

3. நிக்காஹ் செய்தல்.

4. வாசனை திரவியங்கள் பூசுதல்.

5. சவரம் செய்து கொள்ளல்.

6. நகத்தை வெட்டுதல்.

7. ஆண்கள் தலைப்பாகை, தொப்பி அணிதல்.

8. பெண்கள் முகத்தில் சிலதை மறைத்தல்.

9. வேட்டையாடுதல்.



வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 

மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு