புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு

                பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்                  
. 
இரட்சகனான வல்ல அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால்.
இன்ஷா அல்லாஹ் வருகிற ஷஅபான் மாதம் பிறை 15 (27-07-2010) அன்று ‘’பராஅத்’’ இரவாகும்.
      பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு
மனிதர்கள் அல்லாஹ்  விடத்தில் உயர்வையும், நன்மதிப்பையும், அருட் கொடைகளையும், பெறுவதற்காகவும், தங்களிலே அமைந்துள்ள ஆத்மாக்களை பாவமென்னும் அழுக்குகளை விட்டு நீக்கி, பரிசுத்தமடையச் செய்வதற்காகவும், அருளப்பட்ட புனித இரவே ‘’பராஅத்’’  இரவு. மேலும் வல்ல அல்லாஹ் தனது பெருங் கருணையால் மனிதர்களை நரகத்தின் வேதனையை விட்டு நீக்கி, உரிமை விடும் புனித இரவே ‘’பராஅத்’’ இரவு.
அல்ஹதீஸ் ;-
அன்றைய இரவில் மஃரிபிலிருந்து ஸுப்ஹு வரை, வானத்தின் கதவுகள்
திறக்கப்பட்டு ரஹ்மத்துடைய மலக்குகள் முன் வானம் வரை வந்து ‘’எவரேனும் பிழை பொறுக்கத் தேடுபவர் உண்டா’’ என்று வினவிய வாறுள்ளார்கள்.அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல் அடியார்களே! வரவிருக்கும் அப்புனித இரவில் நாம் செய்ய வேண்டிய சிறந்த அமல்களைப் பற்றிய சில குறிப்புகளை இதன் கீழ் தருகிறோம். அன்பு கூர்ந்து நினைவில் கொண்டு வல்ல அல்லாஹ்வை வணங்கி,அவன் அருளைப் பெற்றுக்கொள்வோமாக! ஆமீன்.
அவ்விரவில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றிய குறிப்புகள்;
அன்றைய இரவில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு மூன்று முறை இறை வேதத்தின் இதயமான யாஸின் ஸுராவை  ஓத வேண்டும். முதல் தடவை ஓதும் பொழுது வல்ல அல்லாஹ்வை வணங்கி அவன் நல் அருளைப் பெற்றுக் கொள்வதற்காக, நோயற்ற நல் வாழ் வாழ்வும், நீடித்த ஆயுளையும் தரும் படியாக நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
 இரண்டாவது தடவை ஓதும் பொழுது ஹலாலான ரிஜ்கு விஸ்தீரணத்திற்கும், நிறைவான பொருட் செல்வத்திற்கும், நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது தடவை ஓதும் பொழுது வாழ் நாளில் கடைசி நேரம் வரை, ஈமான் (மார்க்க விசுவாசம்) உறுதியாக இருந்து ,ஸலாமத்துடன் ஈடேற்றம் பெற்றுக் கொள்வதையும், பிற மனிதர்களிடம் தேவையற்று இருப்பதையும்-நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
பிறகு நஃபிலான வணங்களை செய்யவேண்டும்.பிறகு கப்ருஸ்தான் சென்று நம்மை விட்டுச் சென்ற பெற்றோர்கள்,உறவினர்கள், மற்றும் நம் முன்னோர்கள் அனைவர்களுக்காகவும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்டு  அங்கு துஆ மஜ்லிஸ் நடைபெறும். மேலும் தஹ்ஜ்ஜத்து  தொழுகையை அன்றிரவு தொழுதும், குர்ஆன் ஷரீஃபை ஓதியும்,ஸலவாத்தை அதிகமாக ஓதியும், திக்ரு முதலிய தியானங்கள் செய்தும் மற்றும் ராத்திப் ஜலாலிய்யா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை-தனிப்பட்டோ அல்லது கூட்டுறவாகவோ செய்ய வேண்டும். மேலும் அன்றிரவு முக்கியமாக ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும்.அவ்விதம் நோன்பு நோற்பதில் எண்ணற்ற நன்மைகள் உண்டு .மனித வர்க்கம் ஈடேற்றம் பெற வாய்ப்பளிக்கும்  வகையில் தான் இவ்விதமாக புனித நாட்களை-மக்கள் மீது கருணை கொண்டு அல்லாஹ் அருட்கொடையாய் அளித்து வருகிறான்.ஆனால் எவர்கள் அதனைப் பேணி பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள். எனவே இப் புனித இரவில் உலக முஸ்லிம்கள் அனைவர்களும் இந்த புன்னியம் நிறைந்த இரவில் செய்ய வேண்டிய அமல்களை எல்லாம் பரிபூரணமாக செய்து, வல்ல அல்லாஹ்வின் அன்பையும், திருப் பொருத்தத்தையும். பெற்றுக் கொள்ளும்மாறு, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் 
கிளையினர் துஆச் செய்கிறார்கள்.
குறிப்பு ;- புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு பற்றி தெளிவான விளக்கம் பெற
www.tmislam.com (தமிழ் மொழியில் இஸ்லாம்) என்ற இணைய தளத்தை பார்த்து விளக்கம் பெறவும்.
வஸ்ஸலாம்...

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு