அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, March 13, 2011

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சார்பில்
உத்தம திருநபியின் உதய தின விழா 20-2-2011- ஞாயிற்றுக் கிழமை (திங்கள் இரவு) நேரம் இரவு 10-00- மணியளவில், அழகங்குளம் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.
 சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழின் ஆசிரியர், சென்னை மௌலானா மௌலவி
S-N- ஜாஃப்பர் சாதிக் ஃபாஜில் பாகவி M.A.,M.phil ஹஜ்ரத் அவர்கள்.மற்றும்
நாகை மாவட்டம், புரவாச்சேரி
ஜனாப் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சுபுரிஷா ஃபைஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
துபையில் மீலாதுப் பெருவிழா (20-02-2011) அன்று சிறப்புர நடைபெற்றது.
காயல் பட்டிணம்  ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி  ஹாஃபிழ் அப்துல் காதிர்  ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
குவைத்தில் மீலாது பெருவிழா 18-02-2011 அன்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.  நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அபுதாபியில் மீலாது பெருவிழா அபுதாபி அய்மன் சங்கத்தில் சிறப்புர நடைபெற்றது.விழாவில் காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரியின் முதல்வரும், வரலாற்று ஆய்வாலருமான மௌலவி அல்ஹாஜ் அஹமது அப்துல் காதர் மஹ்ழரி ஹஜ்ரத் மற்றும் வத்தலகுண்டு கன்ஜுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா ஷம்சுல் ஹுதா ரஷாதி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புறையாற்றினார்கள்.
இருமேனியில் மீலாது பெருவிழா (19-02-2011)  அன்று சிறப்புர நடைபெற்றது.
கீழக்கரை ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்

வேதாளையில் மீலாது பெருவிழா ( 20-02-2011)  அன்று சிறப்புர நடை பெற்றது.
சென்னை புதுப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம்  மௌலானா மௌலவி நாங்குனேரி முஹம்மது அலி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்.மற்றும் கீழக்கரை ஜும்ஆப் பள்ளி கதீப்,மௌலானா ஹாஃபிழ் ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்களும்  சிறப்புரை ஆற்றினார்கள்.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மீலாதுப் பெருவிழா
 (18-02-2011)        அன்று சிறப்புர நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை அடையாறு ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி மற்றும் வேலூர் ஜாமிஆ பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அப்துல் ஹமீது பாகவி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
பனைக்குளத்தில்    (26-02-2011)  சனிக்கிழமை அன்று
பெருமானாரின் மீலாது பெருவிழா சிறப்புர நடைபெற்றது  நிகழ்ச்சியில் S.P பட்டிணம் பேஷ்இமாம் மௌலானா மௌலவி முஹம்மது யூசுப் ஆலிம் உலவி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
.திருவாரூர் மாவட்டம் அறங்குடியில் 13-02-2011 அன்று பெருமானாரின் மீலாது பெருவிழா சிறப்புர நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை ஜும்ஆப் பள்ளி  கதீப் மௌலானா ஹாஃபிழ் ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள்  சிறப்புறையாற்றினார்கள்.
புதுவை மாநிலம் காரைக்காலில் 20-02-2011 அன்று பெருமானாரின் மீலாது பெருவிழா சிறப்புர நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஜெய்னுல் ஆபிதீன் ஆலிம் நூரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்
இராமநாதபுரத்தில் சின்னக் கடைத் தெருவில் மீலாது பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்
மேலப்பாளையம் மௌலானா மௌலவி P.A காஜா முஹைதீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் மற்றும் கோவை மௌலானா மௌலவி அப்துல்அஜீஸ் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
மலேசியாவில் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பன்னிரெண்டு தினங்கள்
தேரிழந்தூர் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் மீலாது தொடர் பயான் செய்தார்கள்.
 O.M அப்துல் காதிர் ஹஜ்ரத் அவர்களும்,மேலப்பாளையம் P.A காஜா முஹைதீன் ஹஜ்ரத் அவர்களும், மலேசியா முழுவதும் நடை பெற்ற மீலாது விழாக்களில் சிறப்புறையாற்றினார்கள்.
சிங்கப்பூரில் மீலாது பெருவிழா பன்னிரெண்டு தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் மேலப்பாளையம் P.A.காஜா முஹைதீன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பாக தொடர் பயான்  செய்தார்கள்.
இலங்கையில் –வெலிகமா என்ற ஊரில் மீலாது பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் லால்பேட்டை உலமாக்களாகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச்செயலாளர் மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் மற்றும் (J-M-A) அரபுக் கல்லூரியின் பேராசிரியர் அப்துஸ் சமத் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில் பெருமானாரின் புனித மீலாது பெருவிழாக்கள் மிகச் சிறப்புடன் நடந்தது ஆகவே வல்ல நாயன் இச் சிறப்பு மிகு மீலாது பெருவிழாக்களின் பொருட்டால் உலக மக்கள் அனைவர்களுக்கும் அவனது அன்பையும், அருளையும், வாரி வழங்குவானாக ஆமீன் வஸ்ஸலாம்.
இவண்-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப்பேரவை வாழூர் கிளை.0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு