இராமநாதபுர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!!!

         பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப் 
பெருமக்களுக்கு நலத்திட்ட  உதவிகள்
ராமநாதபுரம்,பிப்,19;  -ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் (மோதினார்கள்) நலத்திட்ட உதவிகள் பெறலாம் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ; இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்பெருமக்கள், பணியாளர்களுக்கு (மோதினார்களுக்கு)  நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து மரணத்திற்கு ரூ ஒரு லட்சம், விபத்தில் ஊன முற்றோருக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், இயற்கை மரணத்திற்கு 15- ஆயிரமும், ஈமச்சடங்கு செலவிற்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் இவ்வாரிய உறுப்பினர்களின் முதல் இரண்டு வாரிசுகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது. திருமண உதவித்தொகை 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை 6 ஆயிரம், கருச்சிதைவுக்கு 3 ஆயிரம், கண்ணாடி வாங்க 500, முதியோர் உதவித்தொகை 500 –ம் வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலகத்தை அணுகலாம். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை


Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு