அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Friday, June 9, 2017

காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று 
போற்றப்படும்  (Muhammad Ismail, முஹம்மது 
இஸ்மாயில் ஜுன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு 
இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். 
காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் 
தலைவர் என்று பொருள்.

காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிப்
Mohammad-ismail-saheb.

தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 5, 1893
திருநெல்வேலி பேட்டை, தமிழ்நாடு
இறப்பு மே 4, 1972 (அகவை 75)சென்னை
அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முசுலிம்லீக்

வாழ்க்கை துணைவர்(கள்) சமால் கமீதாபீவி
பிள்ளைகள் 1 மகன் - சமால் முகம்மது மியாகான்.

1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் 
பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் 
இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் 
கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 
1949-ல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று 
மாற்றினார் இஸ்மாயில் சாஹிப்.

 இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி 
மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் 
முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்கள்.

அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக 
விளங்கினார்கள். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, 
ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், 
அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் 
பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்கள்.

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு 
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.

1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 
தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை 
மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், 
எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்கள்.

1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி 
மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்கள்.

1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி 
மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 
நாடாளுமன்றத்துக்குச் சென்றார்கள்.

1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத்
 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 
ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்கள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு