அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, June 3, 2017

மழையை இறக்கிடு மன்னானே !!!


*ஆக்கம்:* கீழக்கரையில் மறைந்து வாழும் 
*பல்லாக்குத் தம்பி ஒலியுல்லாஹ்* 
(ரஹ்மதுல்லாஹி அலைஹி)

மழையை இறக்கிடு மன்னானே
மனதைத் துலக்கிடு ஹன்னானே
கஹ்ரை நீக்கிடு வல்லோனே
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
அன்ஸில் அன்ஸில் அல்மதரா
அன்ஸில் ஙைதன் ஙzஸீரா
انزل انزل المطرا انزل غيثا غزيرا 
அர்ஹிம் யாரப்பி லில் ஃfபுகரா
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
சின்னஞ் சிறியோர் முகம் பாரு
சீதேவி தனத்தை நீ காரு
விண்ணின் வினைகளை நீ காரு
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஏழைகள் பாவம் பொறுத்திடுவாய்
ஏழைகள் மீதில் இறங்கிடுவாய் 
எங்கும் ரஹ்மத்து செய்திடுவாய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஆற்றில் ஜலத்தை ஓடிடச் செய்
அழகாய் கண்மாய்கள் நிரம்பிடச் செய்
குண்டு குளங்களும் நிரம்பிடச் செய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
தானியம் தவசம் மலிந்திடச் செய்
தகாத அதன் விலை குறைந்திடச் செய் 
தங்கடம் ஏழ்மைகள் நீங்கிடச் செய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
நான்கு இமாம்கள் பொருட்டாலும்
நல்ல குதுபுகள் பொருட்டாலும்
நலமாம் அவுலியாக்கள் பொருட்டாலும் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
எல்லா நபிமார்கள் பொருட்டாலும்
எங்கள் நபியுல்லாஹ் பொருட்டாலும்
குல்லு ஸஹாபாக்கள் பொருட்டாலும் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!

*இந்த பிரார்த்தனையை பாவம் அறியா சின்னஞ் 
சிறு பாலர்கள் மூலம் வேண்டுவதன் பலனாக 
வல்ல ரஹ்மான் வளமான நலவான 
மழையை இறக்கி அருள்வானாக*

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு