புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்!    முஸல்லிமா!
    அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.
நாகூர் பாதுஷா நாயகம் (ரஹ்) அவர்களின் மௌலிது மஜ்லிஸ்
நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரஹ்) அவர்களின்  புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது
அஜ்மீர் நாயகம் (ரஹ்) அவர்களின் மௌலிது மஜ்லிஸ்
அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ (ரஹ்) அவர்களின்
புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.
லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின்
              35- வது ஆண்டு  நிறைவுப் பெருவிழா                                   
லால்பேட்டையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35-வது ஆண்டு நிறைவு பெருவிழா (03-06-2011) வெள்ளிக்கிழமைப் பின்னேரம் ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இப்பெருவிழாவில் காயல்பட்டினம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ ஹாமித் பக்ரி  ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரை நிகழ்த்தினார்கள்.
தேவிபட்டினத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் மீலாதுப் பெருவிழா
தேவிபட்டினத்தில் உத்தம திருநபியின் உதய தின விழா மதரஸத்துல் மதாலிபுல் ஹைராத் ஆயிஷா புஹாரி  மெமோரியல்  மஹாலில்           (29-05-2011) ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 5.00-மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இப்பெருவிழாவில் இளையான்குடி ஜாமிஆ மதினத்துல் உலூம் அரபுக்கல்லூரி முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா B. முஹம்மது ராஜூக் ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் விளக்கவுரையும்,  சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் M. முஹம்மது அபூத்தாஹிர் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையும் நிகழ்த்தினார்கள். வஸ்ஸலாம்…..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு