கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம் !!!
நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர். 1. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு. செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்) ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, ...