நினைவுநாள் அழைப்பிதழ்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை, மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ், அல்லாமா, மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான், மஸீஹுல் அனாம், ஆரிஃபு பில்லாஹ், ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா. (22-09-2011) வியாழன் பின்னேரம் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அது சமயம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு வருகை தந்து, ...