லால்பேட்டை ஜாமிஆவில் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா, மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுக்குபாராட்டுவிழா !!!
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் அஞ்சுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜியாக தேர்ந் தெடுக்கப்பட்ட ஜாமிஆவின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜாமிஆ மன்பவுல் அன்வார் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் 5 ஆம் தேதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்கள். ஜாமிஆ பேராசிரியர்கள் மௌலானா மௌலவி முஃப்தீ அப்துர் ரப் ஹஜ்ரத், மௌலானா மௌலவி அப்துல் அலி ஹஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முஹம்மது ஆசிக் கிராஅத் ஓதினார், ரியாஜூல்லா கீதம் வாசித்தார், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா மௌலவி ஸலாஹூத்தீன் வரவேற்புரை ஆற்றினார். சென்னை அடையார் ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி முஹம்மது அஹ்மது ஹஜ்ரத், ஜாமிஆ பேராசிரியர் மௌ...