HISTORY OF CHITTARKOTTAI
புகழ் பெற்ற சரித்திர நாயகர் முன்னால் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் போன்ற வர்களையும், வள்ளல் சீதக்காதி போன்ற பெருமக்களையும், சாதனைச் சிற்பிகள் பலரையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம்.
இம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்தான் சித்தார் கோட்டை. இது சிறிய ஊராக காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுநர்களான உலமாப் பெரு மக்களையும், நல் உள்ளம் கொண்ட வர்களையும்,அறிவார்ந்த எழுத்தாளர் களையும், சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார் கோட்டை. .இந்த ஊரின் இயற்பெயர் சிற்றரசன் கோட்டை இதிலிருந்து சித்தார் கோட்டையாக மாறியது.
சித்தார் கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13.கி,மீஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காகவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது.சித்தார் கோட்டை பஞ்சாயத்திலே ஏழுகிராமங்கள் உள்ளன வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை, இலந்தை கூட்டம் இதில் அடங்கும் சித்தார் கோட்டை மற்றும் வாழூரில் பெரும் பகுதியானவர்கள் முஸ்லீம்கள். பெரும் பகுதியான மக்கள் வெளி நாடுகளில்தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர்கள். சித்தார் கோட்டை வாழ் முஸ்லிம்களின் ஓர் ஐக்கியம்தான் முஸ்லீம் தர்ம பரிபாலன சபாவாகும். இந்த அமைப்புதான் சித்தார் கோட்டை வாழ் முஸ்லீம்களின் தாய்ச்சபை. இதன் சட்ட திட்டங்களுக்கு அனைவர்களும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.சித்தார் கோட்டையில் முஹம்மதியா நர்சரிப் பள்ளி ,முஹம்மதியா ஆரம்பப் பள்ளி,முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி, மத்ரஸா மல்ஹருஸ் ஸுஅதா, மர்ஹும் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி, ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.அல்ஹாஜ்
மெளசூக் ரஹ்மான் அவுலியா அவர்களின் பெண்கள் மதரஸா
ஆகிய அமைப்புகள் இயங்கி வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளில் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்,எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது சாதி மத இன பேத மின்றி இப்பகுதி மக்கள் அனைவரும் கல்வி பெரும் மிகப் பெரிய கல்விக்கூடமாகவும், இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரிப் பள்ளியாகவும், இப் பள்ளி வளர்ச்சி பெற்றுள்ளது .கடந்த 30 ஆண்டுகளில் பல முறை எஸ்.எஸ்.எல்சி பொதுத் தேர்வில் 100 சதவீத்ம் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு பொதுத் தேர்விலும் இப் பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி குறைந்ததே இல்லை. இது இப் பள்ளியின் மகத்தான சாதனையாகும். இச் சாதனைக்கு வித்திட்ட பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியப் பெருமக் களையும், தமிழ்நாடு அரசின் கல்வித் துறை பல முறை
பாராட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.

முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் தீனிய்யாத் பாடம் என்று சொல்லப்படும் மார்க்க கல்வி ஆசிரியர்களாக மௌலவி ஷைஹு நிஜாம் அலி ஆலிம், மௌலவி முஹம்மது ஹபீப் ஆலிம்,மௌலானா மௌலவி மர்ஹும் முஹம்மது ஸலாஹுத் தீன் ஆலிம் அவர்கள், மௌலனா ஷாஹுல் ஹமீது ஆலிம் ஆகிய உலமாப் பெருமக்கள் பணிபுரிந்தார்கள் இப்பொழுது மௌலவி ஜமால் முஹம்மது ஆலிம் பணி புரிகிறார்கள்.
மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் மு.அப்துல் ஹை ஆலிம்
பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
சித்தார் கோட்டைக்கு பெரும் முயற்ச்சி செய்து உயர்நிலைப் பள்ளியை கொண்டு வந்தவர்கள் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும். மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்கள்தான்.மேலும் மௌலான மௌலவி மர்ஹும் மு. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்கள் இந்த ஊருக்கும், இப்பள்ளிக்கும், இரவு பகலாக அல்லாஹ்வுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள் .மேலும் முஹம்மதியா உயர் நிலைப் பள்ளியின் முதல் தாளலரும், முஹம்மதியா மேல்நிலைப் பள்ளியில் இன்று வரை பாடப் பட்டு வருகின்ற இறை வாழ்த்துப் பாடலை எழுதி இயற்றிய சாதனை யாளரும் மௌலானா மௌலவி மர்ஹும் மு.அப்துல் ஹை பாகவி ஆலிம் அவர்களே யாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் உயர் தியாகத்தை ஏற்றுக் கொள்வானாக, இன்னும் மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜென்னத்துல் பிர்தெளஸில் மிக உயர்ந்த நற்ப் பதவிகளை அழிப்பானாகாவும் ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்

சித்தார் கோட்டையில் வலிமார்கள்.
ஹஜ்ரத் மைதீன் அப்பா (ரலி) அவர்கள், சித்தார் கோட்டை அருகே அடங்கப் பட்டிருக்கும் ஹஜ்ரத் பக்கீர் அப்பா (ரலி) அவர்கள்,மற்றும் பெரிய ஆலிம் அஹ்மது இபுறாகீம் ஹஜ்ரத் (ரலி) ஆகிய வர்களாகும்,கீழக்கரை பல்லாக்கு முத்து வாப்பா என்று அழைக்கப்படும் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் சித்தார்கோட்டை, வாழூரில் மார்க்க அழைப்புப் பணியும் , மார்க்க உபதேசங்களும் செய்தவர்கள்.வாழூருக்கு வாழும் ஊர் என்றும்,சித்தார் கோட்டைக்கு சிற்றரசன் கோட்டை என்றும், பெயர் வைத்த வர்களும் இவர்கள்தான்.வாழூர் அருகே அடங்கப்பட்டிருக்கும் கப்பலடியார் ஹஜ்ரத் அப்துல் கரீம் வலியுல்லாஹ் அவர்கள்.
சித்தார் கோட்டையில் தீன் பணி செய்த உலமாப் பெருமக்கள்
மர்ஹும் லெவசா லெப்பை ஆலிம் அவர்கள்.
மர்ஹும் நைனார் லெப்பை ஆலிம் அவர்கள்.
மர்ஹும் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள்.
மர்ஹும் பெரிய ஆலிம்ஷா அஹமது இப்ராஹீம் ஆலிம் அவர்கள்.
புஹாரி ஆலிம்சாவின் தகப்பனார் மர்ஹும் அஹ்மது
இபுராஹீம் ஹஜ்ரத் அவர்கள் .
இபுராஹீம் ஹஜ்ரத் அவர்கள் .
மர்ஹும் மௌலானா மௌலவி அல்லாமா அப்துல் ஹை
ஆலிம் பாகவி அவர்கள்.
மர்ஹும் யஹ்யா லெவை அவர்கள்.
மர்ஹும் அப்துல் அஜீஸ் அவர்கள்.
மர்ஹுமா மஹ்மூதா பீவி அவர்கள்.
மர்ஹுமா மரியம்மாள் அவர்கள்.
திருச்சி ஹாஜாமுஹைதீன் ஆலிம் அவர்கள்.
மர்ஹும் கமுதி ஆலிம்சா அவர்கள்.
மர்ஹும் மௌலானா மௌலவி முஹம்மது ஸலாஹுத்தீன்
ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள்.
புதுக்கோட்டை ஹபீப் ஆலிம் அவர்கள்.
பெரியபட்டிணம் மர்ஹும் அப்துல் கஃபார் ஆலிம் அவர்கள்.
சித்தயன்கோட்டை மர்ஹும் அலாவுதீன் ஆலிம் பாகவி அவர்கள்.
கம்பம் மௌலானா மௌலவி நஜீபுல்ஹுதா ஆலிம் மன்பயீ அவர்கள்.
மௌலானா மௌலவி ஷைஹுநிஜாம் அலி
ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள்.
ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள்.
மௌலானா மௌலவி முஹம்மது ஸலாஹுத்தின்
ஆலிம்ஃபாஜில் மன்பயீ அவர்கள் .
மௌலானா மௌலவி ஸாஹுல்ஹமீது ஆலிம் சிராஜி அவர்கள்.
கோட்டைப்பட்டிணம் ஹாஜாமுஹைதீன் ஆலிம் காதிரி அவர்கள்.
ஆற்றங்கரை மர்ஹும் மௌலானா மௌலவி
சத்தார் ஆலிம் மன்பயீ அவர்கள்.
சத்தார் ஆலிம் மன்பயீ அவர்கள்.
இப்போது பணிபுரியும் மௌலானா மௌலவி அப்துல்காதிர்
ஆலிம் மஹ்ளரி அவர்கள்.
சரித்திரக் கோர்வையாளர்.
மௌலவி தீனின் மைந்தன் ஆலிம் மன்பயீ வாழூர்.