மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம்!!!
பிஸ்மிஹி தஆலா மஸ்ஜித், மத்ரஸா,ஷரீஅத்கோர்ட், இஸ்லாமிய நூலகம் & ஆய்வு மையம் மீட்டிங்ஹால், தங்கும் அறைகள், அனைத்தும் அமைந்த 5 அடுக்குகள் கொண்ட தலைமையகக் கட்டிடம் கட்டிடப் பணிகள் நிறைவு பெற இருக்கின்றன நிறைவு செய்திட மனமுவந்து நிதி அள்ளித் தாரீர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் ! அல்லாஹ்வின் பேரருளால் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக 1956 –ல் உலமாக்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையாகும்.பொன்விழா காலத்தை அடைந்த நம் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு இது வரை சொந்தமான தலைமையகக் கட்டிடம் இல்லை.வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இக்காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் சேவைகளும் செய்திகளும் நம் மக்களை விரைவாக சென்றடையவும், ஜமாஅத்துல் உலமா சபை தன் நோக்கங்களிலும், லட்சியங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தனது பணிகளை பரவலாக்கி மக்கள் பயன் பெறும்படி செய்வதற்கும் ஓர் தலைமையகக் கட்டிடம் கட்டுவது இக் காலத்தின் கட்டாயமாகும். இதனை ...